பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aventyl

167

a wave


ஏற்படுவதால் பேசமுடியாது. வலியுணர்வையும், வெப்ப உணர்வையும் உணர இயலாது. மூளையின் இடது பக்கத்தில் சிதைவு ஏற்பட்டிருந்தால் வலது பக்க உடலில் வலியையும், வெப்பத்தையும் உணர முடியாது. மூளையில் வலதுபக்கத்தில் பாதிப்பு இருந்தால் உடலில் இடதுபக்கத்தில் வலி தெரியாது, வெப்ப உணர்வு இருக்காது.

aventyl : அவென்ட்டில் : 'நார்ட் ரிப்டிலின்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aversion therapy : வெறுப்பூட்டு மருத்துவ முறை : போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சில கெட்ட பழக்கங்களிலிருந்து மீட்பதற்காக, அடிமை கொண்ட பொருளின் மீது வெறுப்பு உண்டாகுமாறு செய்து சிகிச்சை செய்யும் முறை.

avian : பறவை சார்ந்த : பறவை இனத்தைச் சார்ந்த.

avidin : அவிடின் : மிக அதிக மூலக்சுற்று எடை கொண்ட புரதம். வைட்டமின் B-2 கலவை அடங்கியுள்ள 'எச்' (H) ஊட்டக்கூற்றில் இது அதிகம் உள்ளது. முட்டையின் வெண்கருவில் இது மிகுதியாக இருக்கிறது.

avidity : பேரார்வம்; மிகுந்த ஆவல்; பிணைப்புத் திறன் : பற் றாசையுடன் பிறருடன் பிணைத்தல், உடற்காப்பு ஊக்கியுடன் உடற்காப்பு மூலம் பொருந்தும் செயல். நோய் எதிர்ப்பு சக்தி, நோய் ஆதரவு சக்கி இவற்றின் வினைத் திறனை மதிப்பிடுதல்.

avitaminosis : வைட்டமின் பற்றாக்குறை நோய்; உயிர்ச் சத்தின்மை; உயிர்ச்சத்துக்குறை : வைட்டமின்கள் பற்றாக்குறை யினால் உண்டாகும் ஒரு நோய்.

avoidance : தவிர்ப்பு; தவிர்க்கும் தன்மை; தட்டிக் கழிப்பு; ஒழிவிடம் : சுய நினைவுடனோ, சுய நினைவில்லாமலோ பயம், பதற்றம், ஆபத்து, வலி, சண்டை போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு வினை.

avomin : அவோமின் : 'பிராமித் தேசின் தியோக்ளேட்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

avulsion : பிய்த்து அகற்றல்; பிய்த்தல் : உறுப்பு நரம்பு திடீரென வெட்டியிழுத்தல்.

a wave : 'a' அலை : குரல் வளைச் சிரை நாடித்துடிப்பில் தெரிகின்ற ஓர் அலை. இதயத்தின் வலது மேலறை சுருங்குவதால் இது உண்டாகின்றது. கழுத்துச்