பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

axonopathy

169

azathioprine


முடிவடையும் இடத்திலுள்ள. அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை.

axonopathy : நரம்பு வேரிழை நோய் : நரம்பு வேரிழையைப் பாதிக்கின்ற ஒரு வகை நரம்பு நோய்.

axonotmesis : நரம்பணுவால் சிதைவு : ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்.

axotomy : நரம்பு வேரிழை நீக்கல்; நரம்பு வேரிழை வெட்டல்; நரம்பு வேரிழை அகற்றல் : அறுவை மருத்துவம் மூலம் நரம்பு வேரிழையை நீள ஆழ வெட்டுதல்.

Ayerza's : அயெர்சா நோய் : அர்ஜென்டைனா உடலியலாளர் அபெல் அயெர்சா என்பவர் கண்டுபிடித்த நோய் இது. இந்த நோயுள்ள ஒருவருக்கு நுரையீரல் தமனி மிகு இரத்த அழுத்தம், நுரையீரல் தமனித்தடிப்பு, நெடுங்காலமாகக் காணப்படும் நீலம் பாவித்தல், சிவப்பணு மிகைப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

Ayurveda : இந்திய மருத்துவம்; ஆயுர்வேதம் : இந்தியாவின் மிகப்பழைமையான மருத்துவ முறை. இன்றைக்கும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் படும் மருத்துவ முறை. பித்தம், வாயு, கபம் எனும் மூன்று உடலுயிர்க் கூறுகளின் ஒழுங்கு நிலை மாற்றத்தால் தான் உடலில் நோய்கள் வருகின்றன என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நோய்களைத் தீர்ப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களும், ஆரோக்கியமான உணவு, தியானம், உடற்பயிற்சி, நடத்தைப் பண்பு மாற்றங்கள் ஆகியவை உதவும் என்ற கோட்பாடு உள்ளது. தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை மருந்துகளால் (மூலிகை) நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவது.

azapropazon : கீல்வாதமருந்து (ஆஸ்புரோப்பசோன்) : வீக்கத்தைக் குறைக்கக்கூடிய நோவகற்றும் மருந்து. கீல்வாதங்களைக் குணப்படுத்த இது பயன்படுகிறது.

azathioprine : அஜாதயப்ரின் : இரத்தப் புற்றுநோய், தன்