பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

azidothymidine

170

azygos


தடுப்பாற்றல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையின் போது பயன்படும் மருந்து. இது அணுக்கொல்லியாகவும், தடுப்பாற்றல் குறைப்பியாகவும் செயல்படும் தன்மையுடையது.

azidothymidine : அசிடோத்தைமைடின் : 'எயிட்ஸ்' நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கக் கூடிய ஒரு பரிசோதனை முறை மருந்து.

aziocilin : அசியோசில்லின் : ஒரு வகை பென்சிலின். நோய்க் கிருமி எதிர்ப்பு மருந்து.

azoospermia : ஆண் மலடு; விந்தணுவின்மை; விந்தின்மை : விந்தணு உற்பத்தியாகாததால் ஆண்களிடம் ஏற்படும் மலட்டுத் தன்மை.

'azoturia : மிகுயூரியா சுரப்பு நோய்; நைட்ரச நீரிழிவு : நோய் காரணமாக சிறுநீரில் 'மூத்திரை' என்ற யூரியாப் பொருள் சுரத்தல்.

aztreonam : அஜிட்ரியோநாம் : சீடோமோனஸ் ஆரிஜீனோஸா மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃபுளுயென்சா நுண்ணுயிரிகளைக் கொல்லும் திறனுள்ள ஒருவகை நுண்ணுயிர்க் கொல்லி மருந்து.

azure : அஜீர்சாயம் : இரத்த அணுக்களையும் அவற்றின் உட்கருக் களையும் நிறமேற்றம் செய்யப் பயன்படும் மீத்தியோனின் அல்லது பினோதயசின் சாயம்.

azurophil : அஜீரோ அணு : இரத்தச் சிவப்பணுக்களில் ஒரு வகை. அஜீர்சாயத்தோடு ஒட்டக் கூடிய இயல்பு கொண்டது.

azurophilia : அஜீர் அணு மிகைப்பு : இரத்தத்தில் அஜீர் அணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக இருத்தல்.

azygography : ஒற்றைச் சிரை வரைபடம்; ஒற்றைச் சிரை ஊடுகதிரி வரைபடம் : உடலில் ஜோடியற்று, ஒற்றைச் சிரைகளாக உள்ள சிரை மண்டலத்தை, சாயப்பொருள் செலுத்தி, ஊடு கதிர்ப் படம் எடுத்தல்.

azygos : ஒற்றை உறுப்பு; தனித்த : உடன் இணையில்லாத ஒற்றை உறுப்பு அடிவயிற்றிலும், மார்புக் கூட்டிலும் இணையில்லா மூன்று நரம்புகள் உள்ளன.