பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bacilluria

173

bacteria


முதுகுப் பலகை : படுக்கையிலோ, படுக்கை ஊர்தியிலோ நோயாளியின் முதுகுப்பகுதியைத் தாங்குவதற்காக வைக்கப்படும் பலகை.

முதுகுத் தண்டு : முதுகெலும்புகளைத் தாங்கி நிற்கும் தண்டு.

முதுகு ஓய்வுப் பலகை : நோயாளிகள் படுக்கையில் சாய்ந்த நிலையில் ஒய்வெடுப்பதற்காகப் பயன் படுத்தப்படும் பலகை.

bacilluria : சிறுநீர் நோய்க்கிருமி; நுண்ணுயிர் அழற்சி நீரிழிவு : சிறு நீரில் சிறுகோட்டு நோய்க் கிருமிகள் இருத்தல்.

bacillus : சிறுகோட்டுக் கிருமி நோய் நுண்மம்; நீள நுண்ணுயிரி : தாய் உயிர்மத்தினுள் உயிர்மக் கருக்களை உண்டாக்குகிற ஆக்சிஜன் உயிரி சார்ந்த, நீள் உருளை வடிவ உயிரணுக்கள் அடங்கிய ஒருவகை பேக்டீரியா. இவற்றில் பெரும்பாலானவை வயிற்றிலுள்ள அசையும் நுண்ணிைழை மங்கள் மூலம் அசையக் கூடியவை. இவை அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் உயிரிகள். இவற்றின் விதை மூலங்களை, மண்ணிலும் காற்றுத் தூசியிலும் காணலாம்.

back-ache : முதுகு வலி.

backalgia : முதுகு நோவு.

backbone : முதுகெலும்பு.

backflow : பின்னொழுக்கு; எதிர் ஒட்டம் : இயல்பற்ற ஒட்டம்; திரவங்களின் பின்னோட்டம்; எதிரொழுக்குநோய், பின்னொழுக்கு நோய் (எ.டு) மெட்ரல் தடுக்கிதழ் பின்னொழுக்கு நோய்.

back of hand : புறங்கை.

backward failure : பின்னோட்டச் செயலிழப்பு; பின்னோட்ட இதயச் செயலிழப்பு : இதயக் கீழறைகளின் மிகு அழுத்தம் காரணமாக உண்டாகின்ற இதயச் செயலிழப்பு. இந்த நிலைமை பொதுவாக ஈரிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின்போதும் மூவிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின் போதும் உண்டாகின்றது.

baclofen : தசை இசிப்புக் குறைப்பு மருந்து : தன்னியக்கத் தசையின் இசிப்புத் திறனைக் குறைக்கிற ஒரு மருந்து. இதன் பக்கவிளைவுகளாகக் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய்வுக் கோளாறுகள், தசைப்பிடிப்பு, உப்புக்குறைபாடு, மனக் குழப்பம், தலைச்சுற்றல், மந்தநிலை ஆகியவை தோன்றக்கூடும். இழைமக்காழ்ப்புக் கோளாறினைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.

bacteraemia : இரத்தப் பாக்டீரியா; நுண்ணுயிர்க் குருதி : இரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருத்தல்.

bacteria : நோய்க்கிருமி; நோய் நுண்மங்கள்; நுண்ணுயிரிகள் : நோய்களை உண்டாக்கும் நுண்