பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bacteriological

175

bacteriostatic


bacteriological : நோய் நுண்ம ஆராய்ச்சியைச் சேர்ந்த.

bacteriological investigation : நுண்ணுயிரியலாய்வு.

bacteriologist : நுண்மவியல் வல்லுநர்; நுண்மவியலார்; நுண் ணுயிரியலாளர்; கிருமியியலாளர்; நுண்ம ஆய்வாளர்.

bacteriology : கிருமியியல்; நுண்ணுயிரியல; நுண்ம ஆய்வியல் : நோய்க் கிருமிகள் பற்றி ஆராயும் அறிவியல்.

bacterialysin : கிருமி எதிர்ப்புத் தற்காப்புப் பொருள்; நுண்ம உடைப்பி; நுண்ம உடைத்தழிப்பி : நோய்க்கிருமி அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள் நொதிமம்.

bacteriolysion : நுண்ம அழிப்புப் பொருள்; நுண்மக் கழிவு; நுண்ணுயிர் உடைத்தழிப்பி : நுண்மங்களை அழிக்கும் உயிரின தற்காப்புப் பொருள்.

bacteriolysis : கிருமி அழிவு; கிருமிச்சிதைவு : உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் கிருமி அழிவு.

bacteriolytic : நுண்ம அழிப்பு ஊக்கி : உயிரின் தற்காப்புப் பொருளால் உருவாகும் நுண்ம அழிவைச் சார்ந்த.

bacteriophage : கிருமித் தெவ்வு; நுண்ணுயிர் அழிக்கும் பாக்டீரியா விழுங்கி; அதி நுண்ணுயிர் : இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள கிருமி அழிவுக் கூறு.

Bacteriophage typing : அதி நுண்ணுயிரி வகைப்படுத்தல் : நுண்ணுயிரிகளை அழிக்கும் அதி நுண்ணுயிரியின் வகையைக் கண்டறியும் முறை.

bacteriologist : நுண்ம ஆய்வாளர்; நுண்ணுயிரியல் வல்லுநர் : நுண் ணுயிரியல் படிப்பில் சிறப்புப் பயிற்சியும் பட்டமும் பெற்ற மருத்துவர்.

bacteriosis : நுண்ணுயிர் நோய்; நுண்ம நோய்; நுண்மத் தொற்று நோய் : பாக்டீரியா நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய்.

bacteriostasis : நுண்ணுயிர் (கிருமி) வளர்ச்சித்தடை; நுண்ணுயிர் அடக்கி; பாக்டீரியா அடக்கல் : நோய்க் கிருமிகள் வளர்வதற்கு ஏற்படும் தடை.

bacteriostat : நுண்ம வளர்ச்சித் தடுப்பி.

bacteriostatic : நுண்ம வளர்ச்சித் தடைப்பொருள்; நுண்மப் பெருக்குத் தடுப்பு : பாக்டீரியா போன்ற நுண்மங்கள் வளர்வதைத் தடுக்கும் பொட்டாசியம் குளோரேட் போன்ற பொருள்கள்.