பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

baker's itch

178

balanochlamyditis


சூழப்பெற்ற பை போன்ற கட்டி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை மருத்துவர் வில்லியம் பேக்கர் இந்த நோயை முதன்முதலில் இனம் கண்டார்.

baker's itch : மாவு அழற்சி : (1) மாவினை அல்லது சர்க்கரையைக் கையாள்வதால் உண்டாகும் தோல் அழற்சி நோய். மாவுப் பூச்சிகடிப்பதால் உண்டாகும் அரிப்புடன் கூடிய கொப்புளங்கள்.

BAL : 'பிரிட்டீஸ் ஆண்டி லூயிசைட்' எனும் சொற்றொடரின் முதல் எழுத்துச் சேர்க்கை. 'டைமெர்க்காப்ரால்' என்பது இதன் வணிகப்பெயர். உலோக நச்சுப்பொருள்களுக்கு எதிராக வினைபுரியும் ஒருவகை நச்சு முறிப்பான் குறிப்பாக பாதரசம், பிஸ்மத், ஆன்டிமனி ஆகிய உலோக நச்சுக்களை முறிக்க உதவும் மருந்து.

balance : தராசு; துலாக்கோல்; நிறைகோல் : 1 எடைநுண்ணளவைப் பொறி. 2. சமநிலை, 3. உடலை சமநிலைப்படுத்தி நிற்பது. 4. அமிலக்காரச் சமநிலை-இரத்தத்தின் அமிலக் காரத் தன்மையை சமப்படுத்துதல். 5. எடை அளவி.

balanced diet : சமச்சீர் உணவு; சமநிலை உணவு; சம ஊட்ட உணவு; சரிவிகித உணவு : மாவுச்சத்து,புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் தண்ணீர் ஆகிய சத்துகள் சரியான விகிதத்திலும், உடலுக்குத் தேவையான அளவிலும் கலந்துள்ள உணவு இது உடலுக்குத் தேவையான சக்தியைத் (ஆற்றலை) தருகிறது; உடல் நலனை நிலைநாட்ட உதவுகிறது; உடலுக்கு உறுதி தருகிறது.

balanced nutrition : சமச்சீர் ஊட்டம்.

balanced ventilation : சமச்சீர்க் காற்றோட்டம்.

balanced study : ஈட்டாய்வு.

balanic : குறிமொட்டு : ஆண்குறி மொட்டு அல்லது பெண்குறி மொட்டு.

balanitis : ஆண்குறி வீக்கம்; மொட்டழல் மொட்டுத் தோலழற்சி : ஆண் குறியில் ஏற்படும் வீக்கம்.

balano : குறி மொட்டைச் சார்ந்த நோய்கள் : ஆண்குறி மொட்டு அல்லது பெண்குறி மொட்டு நோய்களைக் குறிப்பிடும் துவக்கச் சொல்.

balanoblennorrhoea : ஆண்குறி மொட்டு வெட்டை நோய்; ஆண்குறி மொட்டுத் தோலழற்சி நோய் : கோனோக்கஸ் கிருமிகளால் ஆண்குறி மொட்டுத் தோல் அழற்சி ஏற்படுதல்.

balanochlamyditis : பெண்குறி மொட்டுத் தோலழற்சி நோய் :