பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ballismus

180

balloon tamponade


முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது.

ballismus : வல்லசைவு : சுயக்கட்டுப்பாடில்லா வலிப்பு (கோரியா) நோயில் முன்கைத் தசைகள் கடுமையாக அசைதல் அல்லது ஒட்டம் காணுதல்.

bailistocardiogram : துள்ளு இதயத்துடிப்பு வரைபடம்.

ballistocardiograph : துள்ளு இதயத்துடிப்பு வரைவி : இதய இயக்க உடல் அதிர்வு வரைவி. துள்ளு இதயத்துடிப்பு வரை படம் எடுக்க உதவும் கருவி.

ballistocardiography : துள்ளு இதயத்துடிப்பு வரைபடம் எடுத்தல் : துள்ளு இதயத்துடிப்பு வரைபடக் கருவி உதவியால் இதயத்துடிப்பின் போதும் இரத்தச் சுழற்சியின் போதும் உடலில் உண்டாகின்ற அசைவுகளை வரைபடக் கோடாகப் படமெடுத்தல்.

balloon angioplasty : இதய தமனிநாளச் சீரமைப்பு பலூன் சிகிச்சை : இதயத்தமனி நாளத்தில் அடைப்பு ஏற்படும் பொழுது, மிகச்சிறிய பலூன் ஒன்றை, வளையும் தன்மையுள்ள மெல்லிய குழாய் மூலம் இதயத்தமனியில் செலுத்தி, அங்கு அதை ஊதிப் பெருக்கச் செய்து, தமனி நாளத்தை விரிவடையச் செய்கிறார்கள். இதனால் நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு நீக்கப்படுகிறது. இதயவலி ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அந்த வலி ஏற்படும் வாய்ப்பைத் தடுப்பதற்காக இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

balloon catheter : பலூன் செருகுக குழாய்; பலூன் வடி குழாய் : வளையும் தன்மையுள்ள மெல்லிய ரப்பர் குழாய். இதன் நடுமுனையில் பலூன் போன்ற அமைப்பு இருக்கும். தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இது பயன்படுகிறது; சிறுநீர்ப்பை அடைப்பைப் போக்கவும், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்றவும் இக்குழாய் பயன்படுகிறது.

balloon celi : பூதி அணு; ஊத்த அணு : திசுப்பாய்மம் (சைட்டோ பிளாசம்) நிரம்பப் பெற்ற உடலணு.

ballooning : உடல் பை காற்றேற்றல்; பிதுக்கம் : எலும்பு நலிவு நோயின் போது முதுகுத்தண்டில் உள்ள முள் எலும்புகள் அதிக அழுத்தம் தருவதால் எலும்பு இடைவட்டுகள் வெளிப்பக்கமாகப் பிதுங்கி வருதல்.

balloon tamponade : காற்றுப் பை அடைப்பான் : இரைப்பை மற்றும் குடலிலிருந்து வெளிவரும் இரத்தப் பெருக்கை 'சாங்ஸ் டேக்கன்-பிளாக்மோர்' குழாயைப் பயன்படுத்தி நிறுத்துதல். அறுவை