பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

balloon valvuloplasty

181

band


மருத்துவத்தின்போது அடைப்பானைப் பயன்படுத்தி குருதிக் கசிவை நிறுத்துதல்.

balloon valvuloplasty : தடுக்கிதழ்ச் சீரமைப்பு பலூன் மருத்துவம் : இதயத் தடுக்கிதழ் சுருக்கத்தின் போது பலூன் குழாயைச் செலுத்தி, விரிவடையச் செய்வது.

ball thrombus : பந்துஇரத்த உறைக் கட்டி; பந்துக்குருதி உறைகட்டி : இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டு விடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்.

ballotment : மிதவைப் பொருள் சோதனை; குலுக்கல் : கருத்தரித்து இருப்பதை அறிவதற்குப் பயன் படுத்தப்படும் சோதனை முறை. இதில் டோனிக் குழாயினுள் ஒரு விரலைவிட்டு, கருப்பை முன்புறம் இழுக்கப்படுகிறது. கருத்தரிப்பு ஏற்பட்டிருக்குமானால், கருப்பை மீண்டும் தனது பழைய நிலைக்குச் சென்று. தனக்குரிய திரவத்தில் மிதக்கும்.

balm : தலைப்பு மருந்து; குளிரூட்டும் மருந்து; ஆற்றும் மருந்து.

balneotheraphy : நீராட்டு மருத்துவ முறைதடுக்கிதழ்: நீராடல் வழியாக உடல் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

balsam : சாம்பிராணி தாவரப்பால் மருந்து; தாவர வடிபால் மருந்து : தாவர எண்ணெயில் தயாரிக்கப்படும் தோல் நோய் மருந்து.

balsam of peru : பெரு குங்கிலியம்; பெரு சாம்பிராணி : தென் அமெரிக்காவிலுள்ள குங்கிலிய மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசைத் தன்மையுள்ள நறுமணத் திரவம் கொப்புளங்களுக்குத் துத்தநாகத்துடன் கலந்து களிம்பாகப் பயன்படுகிறது.

balsam of tolu : தோலுக்குங்கிலியம்; தோலு சாம்பிராணி : பழுப்பு நிற நறுமணப்பிசின். இருமல் மருந்துகளில் பயன் படுத்தப்படுகிறது.

balvadi : மழலயர் கூடம்.

Bamberger-Marie disease : பேம்பெர்ஜெர்-மேரி நோய்.

bamboo spine : மூங்கில் முதுகெலும்பு.

Bancroftiosis : யானைக்கால் நோய் : 'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

band : இழைக்கச்சை; தளைக்கயிறு; வார்; கட்டு; இணைபட்டை : உடல் பகுதிகளை இணைக்கும்