பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

baritosis

184

barotrauma


மருத்துவயியல்; உடல் ஊத்தம் மருத்துவயியல்; உடற்பருமன் மருத்துவயியல்; உடல் ஊத்தம் சார்ந்த படிப்பு, உடல் ஊத்தமும் அதோடு தொடர்பு உடைய நோய்களைப் பற்றிய படிப்பு.

baritosis : நுரையீரல் பேரியம் ஏற்றம்; பேரியம் ஏற்ற நுரையீரல் அழற்சி : நுரையீரல்களில் பேரியம் துகள்கள் சென்று தங்குவதால் உண்டாகின்ற ஒரு தொழில் சார்ந்த நுரையீரல் அழற்சிநோய்.

barium enema : பேரியம் வழி குடல் கழுவுதல்; மலக் குடல் பேரியக் கழுவல் : பேரியம் சல்ஃபேட்டை குதவாய் வழியாகச் செலுத்தி குடலினைத் துப்பரவு செய்தல்.

barium meal : பேரிய உணவு.

barium sulphate : பேரியம் சல்ஃபேட் : கரையக்கூடிய கனமான தூள். உணவுக் குழாயை ஊடு கதிர் (எக்ஸ்-ரே) படம் எடுப்பதற்கு இது பயன்படுகிறது. வெள்ளை நிறமான இந்தப் பேரியம் சோறு உணவுக் குழாய் வழியாக இறங்குவதை ஊடுகதிர் மூலம் தெளிவாகக் காணலாம்.

barium sulphide : பேரியம் சல்ஃபைடு : மயிர் நீக்கும் குணமுள்ள ஒப்பனைக் களிம்பேட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்.

barium X-ray examination : செரிப்பு வழி பேரியப் போக்குக் கதிர்ப்படப் பரிசோதனை; பேரியத்துடன் இரைப்பைக் குடல் கதிர்ப்படப் பரிசோதனை; உணவுப் பாதை பேரியப்போக்குக் கதிர்ப்படப் பரிசோதனை : உணவுப் பாதையில் உள்ள நோய்த் தடயங்களைக் கண்டறிவதற்காக நோயாளியை பேரியம் சல்பேட்டைக் குடிக்கசெய்து, உணவுப் பாதையை பல இடை வேளைகளில் ஊடுகதிர்ப்படம் எடுப்பது.

barlow's disease : பார்லோ நோய் : குழந்தைகளுக்கு ஏற்படும் கதிர்வீச்சு நோய்.

Barlow's syndrome : பார்லோ நோயியம் : தொங்கல் மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய். தொய்வான மைட்ரல் தடுக்கிதழ் காணப்படும் நோய்.

barognosis : எடை உணர்வு; எடை உணர்வு ஆற்றல் : எடையை உணரக்கூடிய தன்மை.

baroreceptor : அழுத்த உணர்விகள்; அழுத்த ஏற்பிகள்.

baroreflexes : அழுத்த வினைகள் : அழுத்த உணர்விகள் ஏற் படுத்தும் அனிச்சை வினைகள். அழுத்த ஏற்பிகளால் ஏற்படுகின்ற அல்லது கடத்தப்படு கின்ற அனிச்சை வினைகள்.

barotrauma : அழுத்த மாறுபாட்டு நோய்; அழுந்து புண்; அழுத்த