பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

barrier nursing

185

bartonellosis


உணர்வி; அழுத்தத் தாக்கு : வாயு மண்டல அழுத்தம் அல்லது நீர் அழுத்தம் மாறுபடுவதால் உண்டாகும் காயம். செவிப்பறை கிழிந்து போதல் இதற்கு எடுத்துக்காட்டு.

barrier nursing : தொற்றுத் தடை முறை; ஒதுக்குச் செவிலியம்; தடைச் செவிலியம் : ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒருமுறை. நோயாளியைத் தனிமைப் படுத்தி நோய் தொற்றுவதைத் தடுப்பதுதன் மூலம் இது செய்யப்படுகிறது.

Bar's incision : பார் வகுடல் : சிசேரியன் கருப்பை அறுவைச் சிகிச்சையின் போது வயிற்றின் மத்தியப்பகுதியைக் கிழித்தல் அல்லது கீறுதல். ஃபிரான்சு நாட்டின் 'பேற்றியல்' மருத்துவர் பால்பார் இதனை முதன் முதலில் விவரித்தார். எனவே, அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

bartholinitis : பார்த்தோலின் சுரப்பி வீக்கம் : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படும் வீக்கம்.

Bartholin's duct : பார்த்தோலின் நாளம் : நாவடி உமிழ்நீர்ச் சுரப்பிலிருந்து உமிழ்நீரை வாய்க்குக் கொண்டு வரும் உமிழ்நீர் நாளம். டானிக்ஷ் உடலியல் மருத்துவர் காஸ்பர் பார்த்தோலின் முதன் முதலில் இதனை விவரித்தார். ஆகையால் இந்த நாளம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Bartholinitis : பார்த்தோலின் சுரப்பி வீக்கம்; பார்த்தோலின் சுரப்பி அழற்சி : பெண்ணின் யோனிக்குழாயின் புறத்துளை யின் இருபுறமுள்ள பார்த்தோலின் சுரப்பி அழற்சியுற்று வீங்குதல்.

bartholin's glands : பார்த்தோலின் சுரப்பி : பெண்ணின் கருப்பை வாய்க்குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய சுரப்பிகள். இவற்றின் இழைம நாளங்கள், கன்னிமைத் திரைச் சவ்வுக்கு வெளியே திறந்து இருக்கும்.

bartonella : பார்ட்டோனெல்லா : மனிதனிடமும் பூச்சி இனத்திலும் காணப்படும் 'ரிக்கெட்சியா' வகைக் கிருமி. பெருநாட்டின் மருத்துவர் ஆல்பெர்ட்டோ பார்ட்டன் இதனை விவரித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

bartonellosis : பார்ட்டோனெல்லா நோய் : பார்ட்டோனெல்லா கிருமியால் ஏற்படும் நோய். இது சேற்று ஈயால் பிறருக்குப்