பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

baseline

187

bat wing distribution


மருத்துவர் கார்ல்வான் பெசிடோ இதனைக் கண்டறிந்தார். ஆகவே அவரது பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது.

baseline : ஆதாரவரி; அடிவரி : அடுத்தடுத்து அளக்கப்படும் அளவுகளை ஒப்பிட்டு நோக்க உதவும் துவக்க வரி அல்லது துவக்க அளவு.

basilic : அடித்தளமான : இரத்த நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிறது.

basic health care : அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு.

basophil : நீலவெள்ளணு; தளமேற்பி : (1) அடிப்படைச் சாயங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒர் உயிரணு. (2) நீல நிறம் ஏற்கும் வெள்ளணுக்கள். இது ஒரு குறிப்பிட்ட சாயத்தை ஏற்கிறது.

basophilia : இரத்தத்தில் நீல வெள்ளணுப்பெருக்கம்;தளமேற்பியல் : இரத்தத்தில் நீல நிறம் ஏற்கும் வெள்ளணுக்கள் அதிகரித்தல்.

batch : கூறு.

bath : குளிப்பு முறை மருத்துவம்; குளிப்பு நீர்மம் : உடம்பினை நீரில் அல்லது ஏதேனும் திரவத்தில் முழுக்காட்டி நோய் நீக்கும் முறை. உடலில் திரவத்தைத் தெளிப்பதும் அத்திரவத்தின் ஆவித்தாரையைப் பாய்ச்சுவதும் இதில் அடங்கும். சேறு, தணல், நீர் மெழுகு ஆகியவற்றுடன் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டு, உப்புநீர், கந்தகம் ஆகியவற்றைக் கலந்து இதற்குப் பயன்படுத்து வதுண்டு. நீரியல் மருத்துவமும் இந்த வகையைச் சேரும்.

bathyesthesia : ஆழ் உணர்வு : ஆழ்ந்த உணர்வுடைய, ஆழ் உணர்வு நயம்.

bathypnoea : ஆழ் மூச்சு; ஆழ் சுவாசம், நீண்ட சுவாசம் : ஆழமாக சுவாசித்தல், நெடுநேரம் சுவாசித்தல்.

battered baby syndrome : குழந்தை உருக்குலைவு நோய் : காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க் குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது.

battaring : உருக்குலைத்தல் : ஒருவரைத் திரும்பத்திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். முக்கியமாக, குழந்தைகள், மனைவிமார்கள் (மகளிர்), பாட்டிமார்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இதற்கு உள்ளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு உளவியல் சேதங்களும் ஏற்படுவதுண்டு.

bat wing distribution : வௌவால் இறைக்கைப் பரவல் : நுரையீரல்