பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

BBB

189

Beau's lines


அடிக்கடி ஏற்படும் ஒரு வகை சீழ்புண் நோய். தோலில் முதலில் ஆழமான கரணைகள் (திரளைகள்) உண்டாகும். இவை பின்னர், சீழ்ப்புண்களாக மாறும்.

BBB : பிபிபி : 'பண்டில் பிரான்ச் பிளாக்' மற்றும் பிளட்பிரெய்ன் பேரியர் என்ற சொற்றொடர்களின் முதல் எழுத்துச் சேர்க்கை.

B-cell : பி-அணு : இது ஒருவகை நிண அணு, இரத்தம், நிணநீர் மற்றும் இணைப்புத் திசுக்களில் காணப்படும்; நோய் நுண்மங்களை எதிர்த்துப் போராட நோய் எதிர் அங்கங்களை இரத்தத்தில் உருவாக்குவது இதன் பணி.

B C G : Bacille-Celmette-Guerin : பி.சி.ஜி. (பாசில்-கால்மெட்-குவரின்) : வீரியம் குறைந்த காசநோய்க் கிருமி. இதற்குக் காசநோய் உண்டாக்குவதற்கான ஆற்றல் குறைந்திருந்தாலும், உயிர்த் தற்காப்புப் பொருள் உண்டு பண்ணும் தன்மை இருக்கிறது. காசநோய்க்கு எதிராக நோய்த் தடைக்காப்புச் செய்வதற்குப் பயன்படும் ஒர் அம்மைப்பால் மருந்துக்கு ஆதாரமாகப் பயன்படுகிறது.

beaked pelvis : அலகு இடுப்புக் கூடு; முன் வளைவு இடுப்புக் கூடு : எலும்பு நலிவு நோயின் போது இரண்டு பக்கமுள்ள தொடை எலும்புகளின் தலைப்பகுதிகள் மிகு அழுத்தம் தருவதால் இடுப்புக் கூட்டின் நடுங்கிணைவு எலும்பு முன் பக்கமாக வளையும் நிலைமை.

beam alignment : ஒளிக்கற்றை ஒழுங்கு : ஊடுகதிர்ப்படம் எடுக்கப் படும்போது ஊடுகதிர் உமிழ்குழலின் தலைப்பகுதியை ஊடுகதிர்த் திரையை நோக்கி ஒழுங்குபடுத்துதல்.

beam collimation : ஒளிக்கற்றை நேர்வரிப்பாடு : ஊடுகதிர்களின் ஒளிக்கற்றையை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் படும்படி ஒழுங்குபடுத்துதல்.

beam quality : ஒளிக்கற்றைப் பண்பு; ஒளிக்கற்றைப் பண்புக் கூறு; ஒளிஉமிழ்வு குணம்; ஒளிக் கதிர் தன்னியல்பு : ஊடுகதிர்களின் சக்தியைக் குறிப்பது.

bearing down : அழுத்தித் தள்ளுதல் : 1. பிள்ளைப்பேற்றின் இரண்டாம்கட்ட இடுப்புவலியின் போது குழந்தையை வெளியே நெருக்கித் தள்ளுவதற்காக உண்டாகும் வலி, 2. கருப்பை நெகிழ்ச்சியில், இடுப்பெலும்பு கனமடைந்து இறங்குவது போன்று ஏற்படும் உணர்வு.

beat : நாடித்துடிப்பு; துடிப்பு : இதயத்திலும், இரத்த நாளங்களிலும் இரத்தம் துடித்தல்.

Beau's lines : பியூ கோடுகள்; பியூவரிகள் : கைவிரல் நகங்களில் காணப்படும் மேடிட்ட கோடுகள்