பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bedrest

1911

behcet syndrome


கிலும் தயாரிக்கப்படுகிறது. நோயாளியின் இடுப்புக்கு கீழே இது வைக்கப்படுகிறது.

bedrest : படுக்கை ஓய்வு நோயாளியானவர் படுத்திருந்து ஒய்வு எடுத்தல் நோயின் காரணமாக படுக்கையிலேயே கிடத்தல்.

bedsore : படுக்கைப்புண்; அழுந்துப் புண்; அழுத்தல் புண்; கிடைப்புண் :உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ணுக்கு இரத்த ஒட்டம் தடைப்பட்டு போவதால் குணமாவது கடினம்.

bee : வண்டு; சுரும்பு; தும்பி; தேனி : தேனீகடித்தல், தேனீயின் விஷத்தால் (நச்சால்) உடலில் பாதிப்பு உண்டாவது. தேனி கடித்த உடல்பகுதியில் வலி, செந்தடிப்பு, வீக்கம் ஆகியவை ஏற்படுதல்.

beeturia : செங்கிழங்குச் சிறுநீர் : செங்கிழங்கைச் சாப்பிடுவதால் சிறுநீர் சிவப்பாகப் போவது.

Beevor's sign : பீவரின் தடயம். behaviour : நடத்தை முறை; நடத்தை இயல்புத் தன்மை; நடத்தை : அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக அமைந்திருக்கும். சில கல்வி முறைகளில் நடத்தைமுறையைச் சீராக உருவாக்குவதற்குக் கல்வியறிவூட்டப்படுகிறது. திரிபான நடத்தை முறையை முறைப் படுத்துவதற்குச் சிலருக்கு உளவியல் சிகிச்சையளிக்கப் படுகிறது.

behaviourism : ஒழுக்க முறை; நடத்தையம் : அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம் என்ற கோட்பாடு. புறக் கூறு பாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றி ஆராயும் முறை.

Behcet's disease : பெஹ்செட் நோய்.

behcet syndrome : பெஹ்செட் நோய் : 1937இல் பெஹ்செட் என்பவர் கண்டுபிடித்துக் கூறிய ஒரு நோய். இதில் வாயிலும் பிறப்புறுப்பிலும் புண் உண்டாகும். கண்களில் வெண் விழிப்படல அழற்சி போன்ற மாறுதல்கள் ஏற்படும். ஒருகண் பார்வை பாதிக்கப்படும். சில மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்குப்பின் மறுகண் பார்வை பாதிக்கும்.