பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bejel

192

benadryl


தோலில் கொப்புளங்கள் தோன்றும். இந்நோய் உண்டாவதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கு முறையான சிகிச்சையும் இல்லை. இந் நோயினால் இறுதியில் கண் பார்வை இழப்பு ஏற்படும்.

bejel : பெஜல் : மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில் பரவுகிறது. இதனால் இது எளிதில் பரவுகிறது. இதனால் அரிதாகவே மரணம் விளைகிறது. இதனை பெனிசிலின் மருந்து மூலம் குணமாக்கலாம்.

belching : ஏப்பம் : உணவுக் குழாய்க்குள்ளும், இரைப்பைக்குள்ளும் செல்லும் காற்று (வாயு) உரத்த சத்தத்துடன் வாய்வழியே வெளியேறுதல்.

belladonna : பெல்லாடோன்னா : இரவில் மலரும் பெல்லாடோன்னா என்னும் கொடிய நச்சுப்பூண்டு வகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.

bell-lottomed : கணுக்கால் நோக்கி விரிவடையும்.

belied : தொந்தி விழுந்த; தொப்பை சரிந்த; பெரு வயிறுடைய.

Bell's nerve : பெல் நரம்பு.

bell's palsy : முக முடக்குவாதம்; முகத்தசை வாதம்; கடைவாய்க் கோணல் : மண்டையோட்டுநரம்பின் இழைமங்களிலிருந்து உண்டாகும் முக முடக்குவாதம். இதற்கான காரணம் தெரியவில்லை.

Bell's phenomenon : பெல் நிகழ்வு.

belly : தொப்பை; தொந்தி; வயிற்றுப் புடைப்பு; வயிற்றுத் தசைப் புடைப்பு.

belly-god : பெருந்தீனிக்காரர்; வயிற்றாளி.

belt : அரைக்கச்சை; நிலப்பகுதி : குறிப்பிட்டதொரு நோய் அதிகமாகப் பரவியுள்ள நிலப்பகுதி.

bemegride : பெமிகிரைடு : சுவாசத்தைத் தூண்டும் மருந்து. இது நரம்பு வழி செலுத்தப் படுகிறது.

benactyzine : பெனாக்டைசின் : ஒரு சில குறிப்பிட்ட வினை புரியக்கூடிய நோவகற்றும் மருந்து. இது சுற்றுச் சூழலிலிருந்து விடுபட்ட உணர்வைக் கொடுக்கிறது. மனக்கவலை, உளஅலைவு நரம்புக்கோளாறு போன்ற நிலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

benadry : பெனாட்ரில் : டைபன் ஹைட்ராமின் எனப்படும் இருமல் மருந்தின் வணிகப் பெயர்.