பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

benzene

194

bephenium hydro...


செலுத்தலாம். இது நீண்ட காலம் செயலாற்றக் கூடியது. பெரும்பாலான கிராம் சாயம் எடுக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

benzene : சாம்பிராணி எண்ணெய் : கரியெண்ணெயிலிருந்து (கீல்) எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். இது நிறமற்றது; எளிதில் தீப் பற்றக்கூடியது. தொழில்துறை நச்சியலில் மருத்துவ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்கொள்வதால் வெள்ளணுக் குறைவு, இரத்த சோகை, தோலில் ஊதா நிறப்புள்ளிகள் தோன்றுதல் அரிதாக வெண்குட்டம் ஏற்படும்.

benzhexol : பென்செக்சால் : பார்க்கின்சன் நோயில் தசைச் சுரிப்பு ஏற்படாமல் தடுக்கப் பயன்படும் மருந்து. இதன் பக்க விளைவுகளாக வாய் உலர்வு, தலை சுற்றல் ஏற்படும்.

benzidine : பென்சிடின் : மலத்தில் இரத்தம் அல்லது இரத்த அணுக்கள் காணப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய உதவும் வேதிப்பொருள்.

benzocaine : பென்சோகெய்ன் : அமினோ பென்சாயிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பகுதி உணர்வகற்றி.

benzoic acid : பென்சாயிக் அமிலம்.

benzoin : சாம்பிராணி : மர நறுமணப் பிசின் வகை. இது காப்புப் பொருளாகவும், கபம் வெளிக் கொணரும் மருந்தாகவும் பயன்படுகிறது.

benzphetamine : பென்ஸ்ஃபிட்டாமின் : உடல் பருமனைக் குறைப் பதற்காக வாய்வழி உட் கொள்ளப்படும் ஒரு மருந்து. இது ஆஃபிட்டாமின் மருந்தினைப் போன்றது.

benztropine : பென்ஸ்டிராபின் : அட்ராப்பின் போன்ற ஒரு மருந்து. உயிர்த்தசைமங்களின் திரிபினைத் தடுக்கக்கூடியது; உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகவும், நோவகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பார்க்கின்சன் நோயில் தசை விறைப்பினையும், முடக்கத்தையும் குறைக்கிறது.

benzyl benzoate : பென்சைல் பென்சோயேட் : நறுமணத் திரவம். சிரங்குகளைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப் படுகிறது.

benzyl penicillin : பெனிசிலின்.

bephenium hydroxynapthoate : பெஃபினியம் ஹைட்ராக்சினா ஃபோயேட் :கொக்கிப்புழு, வட்டப் புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து. இது உணவு உண்பதற்குக்