பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Berger's disease

195

betelnut chewing


குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக வெறும் வயிற்றில் கொடுக்கப்படுகிறது.

Berger's disease : பெர்ஜர் நோய்.

beriberi : தவிட்டான் நோய் (பெரி பெரி) betelnut chewing: வைட்டமின்-B என்ற ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் நோய். தீட்டிய அரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் நாடுகளில் இந்நோய் முக்கியமாக உண்டாகிறது. நரம்புக் கோளாறு, முடக்கு வாதம், தசை நலிவு, இழைம அழற்சி, மனச்சோர்வு, இறுதியில் மாரடைப்பு உண்டாகும்.

Berkozide : பெர்கோசைடு : பெண்ட்ரோஃப்ளுவாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Berry's sign : பெர்ரி தடயம் : கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படும். கேடயச் சுரப்பி புற்று நோயின்போது கழுத்துத் தமனி காண்பது அரிது. இத்தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் சர். ஜேம்ஸ் பெர்ரி கண்டுபிடித்தார்.

berylliosis : பெரிலியம் நோய் : பெரிலியம் என்ற கெட்டியான வெள்ளை உலோகத் தனிமத்தைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் கோளாறு. இது தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது.

beryllium : பெரில்லியம் : கெட்டியான வெள்ளை உலோகத் தனிமம். வான ஊர்திகள், அணு இயக்கக் கருவிகள், ஊடுகதிர் உற்பத்திக் கருவிகள் மற்றும் வெப்பம் தாங்கும் பாண்டங்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகம்.

Besnier's prurigo : அரிப்புக் கொப்புளம் : குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய். குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது.

bestiality : விலங்கோடு புணர்வு; விலங்குப் புணர்வு : விலங்கைப் புணரும் ஒரு வித மனநோய். வன்செயல், வக்கிரமான, வெறி பிடித்தவரின் செயல்.

beta : பீட்டா : கிரேக்க மொழியின் இரண்டாம் எழுத்து.

Beta-loc : பீட்டா-லாக் : மெட்டோப்ரோலோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

betamethasone : பீட்டாமெத்தசோன் : அழற்சி எதிர்ப்பியாகப் பயன்படும் இயக்குநீர் மருந்து.

betelnut chewing : வெற்றிலை மெல்லுதல்; வெற்றிலை பாக்கு