பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bethanecol

196

bibliomania


போடுதல் :வெற்றிலையில் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை இவற்றை வைத்துச் சுருட்டி, வாயில் வைத்து மெல்லுதல். இது வாய்ப் புற்றுநோய்க்கு பாதை அமைக்கும்.

bethanecol : பெத்தனிக்கால் : செயல் முறையில் கார்பக்காலை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப்பொருள். நச்சுத்தன்மை இல்லாதது. சிறு நீர்த்தேக்கம், அடி வயிறு விரிவடைதல் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Betnesoil : பெட்னசால் : பீட்டா மெத்தாசோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Betnovate : பெட்னோவாட் : பீட்டா மெத்தாசோன் அடங்கிய ஒரு களிம்பு மருந்தின் வணிகப்பெயர்.

Betz's cell : பெட்ஷ் அணு : பெருமூளையின் இயக்கப்புறணியில் காணப்படும் மிகப்பெரிய அணு வகை. ரஷ்யா நாட்டின் உடலியல் மருத்துவர் விலாடிமிர் பெட்ஷ் இந்த அணுவைக் கண்டு பிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

bevel : சரிவு : முனைச்சாய்வு சரிந்த பகுதி, சரிவான பகுதி, பற்குழிச் சரிவு.

bewilderment : திகைப்பு; திகைத்தல்.

bezoar : இரைப்பையில் முடிச்சுருள் : இரைப்பை மற்றும் சிறு குடலில் முடி பந்து போன்று சுருண்டு இருத்தல். அல்லது பழம் மற்றும் காய்கறிச் சக்கைகள் திரண்டு கொள்ளுதல். சமயங்களில் உணவு கூட பந்து போல் உருண்டு, திரண்டு இரைப்பையை அடைக்கலாம்.

Bezold'd mastoiditis : பெஷால்ட் பொட்டெலும்பு அழற்சி; பெஷால்ட் பொட்டெலும்பு வீக்கம் : பின் தலையில் பொட்டெலும்புக் கூம்புமுனை அழற்சியுற்று, வீங்குதல், சீழ்ப்பிடித்தல். மூனிச் நகரைச் சேர்ந்த காது நோய் வல்லுநர் ஃபிரெட்ரிக் பெஷால்ட் இதனைக் கண்டறிந்த காரணத் தால், இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Bhopal gas tragedy : போபால் நச்சுவாயு விபத்து; போபால் விஷவிபத்து சோகம் : 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாளில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் 'மெதில்ஐசோசியனேட்' எனும் நச்சுவாயு கசிந்து, காற்றில் கலந்து, சுற்றுச்சூழல் மாசுபட்டதால், சுமார் 2,500 பேர் இறந்தனர்.

bibliomania : நூல் சேர்ப்பு வெறியர்; புத்தகச் சேர்ப்புப் பிரியர் : நூல்களைச் சேர்ப்பதில் அடங்காத ஆர்வமுள்ளவர்.