பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biliary calculus

199

Billroth's operation


வயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு உண்டாகும். இந்த வலி உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தோன்றி, பல மணிநேரம் நீடித்திருக்கும். வாந்தியும் ஏற்படலாம்.

biliary calculus : பித்தக்கல்.

biliary tract : பித்தப் பாதை.

biloleate : இருவளைவு.

biloleate : இரு நுண் வளைவு.

bilious : பித்தத்துக்குரிய : பித்த நீர் தொடர்புடைய நோய்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள்.

Bilious vomiting : பித்த வாந்தி; பித்தநீர் வாந்தி : வாந்தி எடுக்கும் போது பித்தநீர் வாந்திப் பொருளாக வெளிவருதல்.

biliousness : பித்தநீர் மயக்கம்; பித்தநீர் மிகைப்பு : கல்லீரல் நோயால் அல்லது கல்லீரல் செயல் குறைபாடால் ஏற்படுகின்ற நிலை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, இரைப்பைக் கோளாறு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றும்.

bilirubin : பிலிரூபின் : இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழிவுறுவதால் குருதி உருண்டைப் புரதம் (ஹிமோக்ளோபின்) உடைந்து உண்டாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில் கரையச் கூடியது. இது உடம்பிலுள்ள தீவிர வளர்சிதை மாற்றத் திசுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.

bilirubinaemia : பிலிரூபின் நோய் : இரத்தத்தில் பிலிரூபின் என்ற நிறமி இருத்தல். சில சமயம் இரத்தத்தில் பிலிரூபின் அளவுக்கு அதிகமாக இருப்பதை இச்சொல்லால் தவறாகக் குறிப்பிடுகிறார்கள்.

Bilirubinuria : சிறுநீரில் பிலிரூபின் : சிறுநீரில் பிலிரூபின் நிறமிப் பொருள் மிகையாக இருக்கும் நிலை.

bilis : பித்தநீர்.

bilitherapy : பித்தநீர் மருத்துவம்.

biliuria : சிறுநீர்; பித்தநீர் நிறமி; பித்தச் சிறுநீர் : சிறுநீரில் பித்த நீர் நிறமிகள் இருத்தல்.

biliverdin : பிலிவெர்டின் : பிலிரூபின் என்ற நிறமி ஆக்சி கரணமாவதால் உண்டாகும் பச்சை நிற பித்தநீர் நிறமி.

Billroth's operation : பில்ரோத் அறுவை மருத்துவம் : அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (2) வயிற்றின் புறக் கோடி முனையைச் சிறிது நறுக்கி அறுவைச் சிகிச்சை செய்தல்.