பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biochemical

201

biogenic


மருந்து இருக்கும் அளவு மருந்து செலுத்தப்படும் வழி, மருந்து வளர்சிதையும் அளவு, கொழுப்பில் மருந்து கரையும் தன்மை, மற்றும் புரதங்களோடு இணையும் பண்பு ஆகியவற்றைப் பொறுத்து உடலில் மருந்து இருக்கும் அளவு வேறுபடும்.

biochemical : உயிர் வேதிப்பொருள் : உயிர் வேதியியலைச் சார்ந்த பொருள். நோயை நிர்ணயிப்பதற்கு உதவும் உடற்காப்பு ஊக்கி, உடற்காப்புப் பொருள், நொதி, இயக்குநீர் போன்ற உயிர்வேதியியல் பொருள்கள். நோய் நிலைகளில் இப்பொருள்களின் அளவு, அமைப்பு சுரப்பு ஆகியவை மாறுபடலாம்.

biochemist : உயிரிய வேதியியலார்.

bio-chemistry : உயிரியவேதியியல் : உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

biodynamics : உயிரியக்கவியல் : உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி.

bioengineering : உயிரிய பொறியியல் : நோயாளிகளின் உடம்பினுள்ளும், வெளியேயும் பயன்படுத்துவதற்குரிய நுட்பமான மின்னணுவியல் அல்லது எந்திரவியல் கருவிகளை வடிவமைத்தல்.

bio-ethics : உயிரிய அறவியல் : உயிரியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண அறவியலைப் பயன்படுத்துதல்.

biofeedback : உடல் உயங்கல் மாற்றக் குறிப்பு; உடலியங்கல் மறுதகவல் ; உயிர் மறுதகவல் : இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தசை விறைப்பு போன்ற உடலின் தன்னியக்கப் பணிகள் பற்றிய ஒளி அல்லது ஒலித் தகவல்களை வழங்குதல். இத்தகவல்களிலிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

Bio-gastrone : பயோ-காஸ்டிரோன் : கார்பினோக்சோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

biogen : உயிர் உயிர்ப்பு : உயிர்த் தசையில் இருப்பதாகக் கருதப் படும் உயிர்க்கூறு.

biogenesis : உயிரின இயல்; உயிர் மரபு; உயிர் பிறப்பியல் : உயிரிலிருந்து உயிர் பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் கோட்பாடு.

biogenetic : உயிர் மரபான; மூல உயிர்க் கூறுக்குரிய; உயிர் மரபுக் கோட்பாட்டுக்குரிய.

biogenic : உயிர்பிறப்பால்; உயிர் பிறப்பு : உயிருள்ள பொருளிலிருந்து உருவானது.