பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biometry

203

biotechnology


செய்தல், இயற்கை அறிவியலைப் பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கலை.

'biometry : உயிரிய காலக் குறிப்பியல்; உயிரின வாழ்நாள் குறிப்பு : உயிரினங்களின் உண்மை நிலவரங்களுக்குப் புள்ளியியலைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்தல் அல்லது ஒப்பிடுதல்.

biopharmaceutics : உயிரிய மருந்தியல் : ஒரு மருந்தின் இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

biophysics : உயிரிய இயற்பியல் : உயிருள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

bioplasm : 3ஊன்மம்.

bioplast : ஊன்ம நுண்கூறு; உயிர்த் தாது.

biopsy : உயிர்ப்பொருள் ஆய்வு; உடல்திசு ஆய்வு : உடலின் பிணியுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்த, நுண்ணோக் காடியில் வைத்துச் சோதனை செய்து, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல்.

Bioral : பயோரல் : கார்பினோக் சோலோஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

biorhythm : உயிரியல் ஒழுங்கு இயல்பு: உயரிலயம் : உடலியல், உணர்வியல், அறிவார்ந்த நடவடிக்கைகள் ஒருவித ஒழுங்கியல்புடன் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடைபெறுதல். இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியது.

bioscience : உயிர் அறிவியல் : உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை.

biosensors : உயிரியல் உணர்விகள் : தோல் வெப்பநிலை, புற அழுத்தத்தினால் ஏற்படும் ஈரப்பதன் அல்லது உயிரியல் மாறுபாடுகள் போன்ற உயிரியல் செயல்முறைகளின் விளைவினை அளவிடுவதற்கான நுண்கருவிகள்.

biosis : உயிர்; உயிருள்ள : இணைப்புச்சொல். உயிரினம் வாழும் முறையைக் குறிப்பிட உதவும் சொற்பதம்.

biosphere : உயிர்மண்டலம்.

biostatistics : உயிர்புள்ளியியல் : புள்ளியியல் கோட்பாடுகளை உயிரினங்களின் ஆய்வுக் குறிப்புகளோடு ஒப்பிட்டு நோக்குதல்.

biosynthesis : உயிரியல் சேர்க்கை : உயிரினங்கள் உருவாக்கும் வேதியியல் பொருள்.

biosystem : உயிர்மண்டல முறை.

biotechnology : உயிரியநுட்பவியல் : தொழில் நுட்பம் பற்றிய அறிவியல் ஆய்வில் உயிரியல்