பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bismuth meal

205

black head


ஒருவரிடமே ஆண் பெண் கருப்பை இரண்டுக்கும் பொதுவான திசு இருக்குமானால், அவர் உண்மையில் இருபால் கூறு உடையவராவார். ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுறவு கொள்ள விழைபவரையும் இது குறிக்கும்.

bismuth meal : நிமிளை உணவு : சீரண உறுப்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு.

Bisolvin : பைசால்வின் : புரோம்ஹெக்சைன் எனும் மருந்தின் வணிகப் பெயர்.

bistoury : கூர்ங்கத்தி : ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்படுகிறது.

bitolterol : பிட்டால்ட்டிரால் : மூச்சுக்குழாய்களைத் தளர்த்தும் பண்புடைய இயக்க ஊக்கி மருந்து.

Bitot's spots : பிட்டோட் புள்ளிகள் : விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர்படலம், சிம்புத்துணுக்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை. வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது.

bitters : கைப்பான் மருந்து : கசப்புப் பூண்டு வகைகளிலிருந்து வடிக்கப்பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்து நீர்.

biuret : பையூரெட் : யூரியாவின் சிதைவுப் பொருள். பையூரட் பரிசோதனை யூரியா மற்றும் இரத்த ஊநீரில் உள்ள கரையும் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனை.

biventer : இருதலைத்தசை : இரு புடைப்புகள் உடைய தசை.

biventricular : இதயக்கீழறைகளைச் சார்ந்த : இதயக் கீழறைகள் இரண்டையும் பாதிக்கின்ற.

Bjerrum's screen : பிஜெரம் திரை : ஒர் இலக்குத்திரை டானிஷ் நாட்டின் கண் மருத்துவர் ஜானிக் பிஜெர்ம் கண்டுபிடித்த காரணத்தால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது. இது விழித்திரையில் உள்ள குருட்டுக் பொட்டைக் காண்பதற்கு உதவுகிறது.

black : கருமை; ஒளியற்ற; இருண்ட; கறுத்த; கறுப்பு.

black head : முகப்பரு; கருமுள் : கருமை நிறத்தில் காணப்படும்