பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

black eye

206

blastoma


தோலடிச் சுரப்பு நீர் உருண்டு திரண்டு மயிர்க்காம்புத் துளையை அடைத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது.

black eye : கறுப்புக்கண்; கறுங்கண் : கறுப்பு நிறத்தில் காணப்படும் கண் விழிவெண்படலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் நிலைமை.

black lung : கறுப்பு நுரையீரல்; கறுப்பு சுவாசப்பை : இது ஒரு தொழில் சார்ந்த நோய். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிவோரின் நுரையீரல்களில் கரித்துக தொடர்ந்து படிவதால் அவர்களுடைய நுரை யீரல்கள் கறுப்பாக இருக்கும்.

blackout : இருட்டடிப்பு : சிறிது சிறிதாக சுயநினைவை இழக்கும் நிலைமை.

black tongue : கருநாவு;கருப்பு நாக்கு : நாக்கின் மேற்பரப்பு கறுப்பு நிறத்திற்கு மாறிவிடுதல். முடிநாக்கு.

blackwater fever : கருநீர்க் காய்ச்சல் : வெப்ப மண்டலங்களில், குறிப்பாக ஆஃப்ரிக்காவில், உண்டாகும் ஒருவகைக் கடுமையான முறைக்காய்ச்சல் (மலேரியா). இந்நோய் பிடித்தவர்களுக்கு இரத்தச் சிவப்பணுக்கள் பெருமளவில் அழிகின்றன. இதனால் சிறுநீர் அடர்ந்த கருநிறத்தில் போகும்.

bladder : சவ்வுப்பை; தேங்குபை; நீர்ப்பை : மெல்லிய தாள் போன்ற தோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கி யிருக்கும். பித்தநீர்ப்பை, சிறு நீர்ப்பை ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை.

blade-bone : பின்புறத் தோள் எலும்பு.

Blalock's operation : பிளாலாக் அறுவை மருத்துவம் : நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை.

bland : நோவாற்றி; இதமான; எரிச்சலிலா : நோவினை ஆற்றக்கூடியது: வேதனையைத் தணிக்கவல்லது; எரிச்சலூட்டாதது; மென்மையானது.

blast : வெடித்தல்.

Bastomyces : கருஊன்மங்கள் : நோய் உண்டாக்குகின்ற, நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரிகள்.

blastocyst : சினை நீர்க்கோளம்; சினை நீர்ப்பை; கருத்திசு நீர்ப்பை : துவக்க நிலைக்கருவில் உருவாகும் நீர்ப்பை.

blastoma : சினைக்கட்டி, கருத்திசுக்கட்டி : கருவில் உருவான உறுப்புகளில் உண்டாகும் கட்டி.