பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Blastomere

207

bleeding


Blastomere : சினைக்காரணி.

Blastoomycosis : கரணை : கரு ஊன்மங்கள் எனப்படும் நொதி (ஈஸ்ட்) போன்ற அரும்பு உயிரிகளினால் உண்டாகும் சொரசொரப்பு நிலைமை. இது தோல், உள்ளுறுப்புகள், எலும்புகள் ஆகியவற்றைப் பாதிக்கும்.

blastula : கருக்கோளகை : முதிர்ச்சியடைந்த சூல்முட்டையின் தொடக்க நிலை.

BLB mask : பி.எல்.பி. முகமறைப்பு : உயரமான இடங்களில் உள்ளவர் களுக்கு பிராணவாயு செலுத்துவதற்குப் பயன்படும் முகமூடி. பூத்பை, லவ்லேஷ், புல்புலியன் எனும் மூவர் சேர்ந்து இந்த முகமறைப்பைக் கண்டுப் பிடித்ததால் இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

bleaching : வெளிர்த்தல்; வெளுத்தல் : துணி மற்றும் சில பொருள் களில் உள்ள கரையை வேதிப்பொருள் கொண்டு அகற்றுதல்.

சலவைத்துள் : 'கால்சியம் ஹைப்போ குளோரைட்' எனும் வேதிப்பொருளின் வியாபாரப் பெயர். (வணிகப் பெயர்).

bleb : கொப்புளம்; பெருங்கொப்புளம்; நீர்க் கொப்புளம் : தோலின் மேல் பகுதி வீக்கம் அடைதல் அல்லது புடைத்தல்.

bleeder : குருதி சிந்துபவர்; குருதியளிப்போர் : சிறுகாயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோயினால், அடிக்கடி குருதியிழப்பு ஏற்பட்டு அவதிப்படும் நோயாளி.

bleeding : குருதி ஒழுக்கு; இரத்த ஒழுக்கு; குருதியோட்டம்; குருதி வடிப்பு; குருதிக் கசிவு : காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல்.

தமனி இரத்த ஒழுக்கு : தமனி இரத்த நாளத்திலிருந்து வெளியேறும் இரத்தம். இது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

மாதவிலக்கு; மாதஇடைஒழுக்கு : பெண்களுக்கு மாதவிலக்கின் இடைப்பட்ட காலத்தில் இரத்த ஒழுக்கு ஏற்படுதல்.

சிரை இரத்த ஒழுக்கு : சிரை இரத்த நாளத்திலிருந்து இரத்த ஒழுக்கு ஏற்படுதல் இந்த இரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

குருதியொழுக்குக் காலம்; இரத்த ஒழுக்கு நேரம்; இரத்தம் வடியும் காலம் : இரத்த நாளத்தைக் குத்தும்போது இரத்தம் வடியத் துவங்கியது முதல் அது உறைந்து இரத்தம் வடிதல் நிற்கும் வரையுள்ள நேரம் (காலம்).