பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blind loop syn...

209

blood


blind loop syndrome : குடலடைப்பு நோய் : குடலில் ஏற்படும் தடை அல்லது அறுவைச் சிகிச்கையினால் குருதி நாளங்கள் தடைபடுதல் காரணமாக ஏற்படும் நோய். சிறுகுடலில் குருதியோட்டம் நின்றுபோய் பாக்டீரியா வளர்ச்சி ஊக்குவிக்கப் படுகிறது. இதனால், வயிற்றுப் போக்கும், செரிமானமின்மையும் ஏற்படுகிறது.

blindness : குருடு; பார்வையற்ற தன்மை; குருட்டுத்தன்மை; பார்க்க இயலாமை : கண்புரை நோய், கண்மிகை அழுத்த நோய், நிறமிழி இழைம நோய், கண் விபத்து பாதிப்புகள் ஆகியவற்றால் பார்வை பறிபோவது அல்லது பார்வை இல்லாத நிலைமை.

blind sight : குருட்டுப் பார்வை : பார்வைக்குரிய புறணி சேத மடைவதால், சில நோயாளிகள், வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு, பார்வையிழந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். எனினும், எஞ்சியுள்ள பார்வையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம்.

blind spot : குருட்டுப் பகுதி; குருட்டுப் பொட்டு, குருட்டுப் புள்ளி : விழித்திரையின் குருட்டுப் பகுதி. இங்கு பார்வை நரம்பானது, விழித்திரையில் இருந்து விலகிவிடுகிறது. இதனால், இப்பகுதியினால் ஒளியை உணர இயலாது.

blink : மிகை இமையசை; மிகை இமை அசைப்பு : கண் இமைகள் இயல்புக்கு மீறி அடிக்கடி அசையும் நிலை.

blister : எரிகொப்புளம்; கொப்புளம் : குருதி ஊனிர் அல்லது குருதி சேர்வதால், உள்தோலிலிருந்து வெளித்தோல் பிரிந்து விடுதல்.

Blistering fluid : கொப்புள நீர்மம்.

Blocadren : பிளாக்காட்ரன் : டிமோலால்மாலியேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

bloating : உப்புசம்; வயிறு உப்புசம்; வயிறு ஊத்தம் : அஜீரணம் மற்றும் குடல் அசைவுகளின் இயல்பற்றத் தன்மையால் வயிறு உப்பிக் கொள்ளுதல்.

block : அடைப்பு: தடை.

blockade : மருந்துத் தடை : ஒரு மருந்தின் விளையை மற்றொரு மருந்தால் தடுப்பது.

blocker : அடைப்பான்; முட்டுக் கட்டை; தடுப்பான் : உடலியக்கத் தின் இயல்புத் தன்மையைத் தடுக்கின்ற மருந்து.

blocking : உணர்வு தடுத்தல்.

blood : இரத்தம்; குருதி : இதயத்திலும் இரத்தநாளங்களிலும் நிறைந்திருக்கும் செந்நிற