பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blood-money

212

blood urea


blood-money : குருதிக் கூலி.

blood-poisoning : குருதி நச்சுத் தன்மை.

blood pressure : குருதி அழுத்தம்; இரத்த அழுத்தம் : இரத்த நாளங்களின் சுவர்களில் இரத்தம் உண்டாக்கும் அழுத்தத்தின் அளவு, பொதுவாக இது இதயத்தில் இருந்து குருதி கொண்டு செல்லும் நாளங் களாகிய தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. குருதி அழுத்தமானி எனப்படும் கருவியைப் பயன்படுத்தி, அதிலுள்ள பாதரச அளவினை மில்லி மீட்டரில் கணக்கிட்டு இரத்த அழுத்தம் அளவிடப் படுகிறது. ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் தமனி இரத்த அழுத்தம் ஏறி இறங்குகிறது. இதயத்திலிருந்து தமனிகளுக்கு இரத்தம் பாயும் அளவைப் பொறுத்து இதயச் சுருக்க அழுத்தம் மிக உயர்ந்த அளவில் இருக்கும். தமனி மற்றும் நுரையீரல் தமனியில் தடுக்கிதழ்கள் (வால்வு) முடப் பட்டு, இதயம் தளர்ச்சியடையும் போது, இதயச்சுருக்க அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மிக உயர்ந்த மிகக் குறைந்த அழுத்த அளவுகள் பதிவு செய்யப்படுகின்றன (எடுத்துக்காட்டு : 120/70).

blood serum : குருதி நிணநீர்(குருதி ஊனீர்/குருதி வடிநீர்); குருதி ஊனீர்; குருதி தெளிநீர் : குருதி உறையும்போது வெளிப்படும் திரவம். இது, உறையவைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும்.

blood sinus : குருதிப் புர்அஇ.

blood-sprent : குருதிதெறித்த.

blood stain : குருதிக்கறை.

blood sugar : குருதிச் சர்க்கரை : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு, இது இயல்பான வரம்பளவுகளுக்குள் மாறுபடுகிறது. இதன் அளவினை பல்வேறு செரிமானப் பொருள்களுள் (என்சைம்) இயக்குநீர்களும் (ஹார்மோன்), கட்டுப்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமானது இன்சுலின் என்ற கணையச் சுரப்பு நீர் ஆகும்.

blood transfusion : மாற்றுக் குருதியேத்தம் : ஒருவர் இரத்தத்தை இன்னொருவர் இரத்த நாடிக்கு மாற்றுதல்.

blood urea : இரத்த மூத்திரை : இரத்தத்தில் புரத வளர்சிதை மாற்றத்தின் காரணமாக இறுதியாக உண்டாகும் பொருள் (யூரியா). இதன் அளவு, இயல்பான வரம்புக்குள் மாறுபடும். இந்தப் பொருளை முக்கியமாக வெளியேற்றுகிற சிறுநீரகங்கள்