பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bone-marrow transplant

215

Boop


தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள், சிறு நீரகம் செயலிழத்தல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும். இந்த நோய் பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகிறது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான ஒரே வழி எலும்பு மச்சை மாற்று அறுவைச் சிகிச்சையேயாகும். இந்த அறுவைச் சிகிச்சையில், நோயுற்ற மச்சை நீக்கப்பட்டு, மாற்றாக ஆரோக்கியமான எலும்பு மச்சை வைக்கப்படு கிறது.

bone-marrow transplant : எலும்பு மச்சை மாற்று அறுவை மருத்துவம் பெரும்பாலான எலும்புகளின் மையப்பகுதியில் எலும்புச் சோறு அல்லது எலும்பு மச்சை என்னும் மென்மையான திசு உள்ளன. இதுதான், உடம்பி லுள்ள நோயைத் தீர்ப்பதற்கான இரத்த வெள்ளணுக்களை உற்பத்தி செய்து, முதிர்ச்சியடையச் செய்கிறது. எலும்பு மச்சையின் இந்தச் செயல்முறை சேத மடையும்போது நோயாளி இறந்துவிடுகிறார். இதைத் தடுப்பதற்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் நோயுற்ற எலும்பு மச்சை உயிரணுக்களை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆரோக்கியமான உயிரணுக்களை மச்சையில் வைக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான உயிரணுக்களை நோயாளியிடமிருந்த எடுக்கலாம்; இல்லையெனில் இந்த உயிரணுக்களைப் பெரும்பாலும் மார்பெலும்பிலிருந்து அல்லது இடுப்பெலும்பு வரை, முகட்டிலிருந்து எடுக்கிறார்கள். எலும்பில் பல துளைகளிட்டு ஊசிகள் மூலம் மச்சை எடுக்கப்படுகிறது. இது நோயாளிக்கு நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. நோயை எதிர்க்கும் உயிரணுக் கற்றைகளின் முன்னோடிகளான நடுத்தண்டு உயிரணுக்களையும் நோயுற்ற உயிரணுக்களுக்குப் பதிலாக வைக்கலாம். நடுத்தண்டு உயிர் அணுக்களை, எலும்பு மச்சை இரத்தம், தொப்புள்கொடி இரத்தம் அல்லது கருப்பைச் சிசுவின் நுரையீரலிலிருந்து எடுக்கலாம்.

bonesetter : எலும்பு பொருத்துநர்.

bony : எலும்பு சார்ந்த.

bony landmark : எலும்பு அடையாளம் : உடல் உறுப்புகளின் இருப்பிடங்களை அடையாளம் காண உதவும் எலும்புப் பெருக்கம்.

Boop : பூப் : பிராங்கியோலைட்டிஸ் ஆப்லிடொரன்ஸ் ஆர்கனைசிங் நிமோனியா என்னும் நோயின் ஆங்கிலச் சொற்றொடரின் முதல் எழுத்துச் சேர்க்கை. மூச்சுநுண் குழாய்