பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Borrelia

217

botulism


கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடித்த 14 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றுகின்றன. நெஞ்சின் அடிப்பகுதி அல்லது அடிவயிறு அல்லது முதுகெலும்புத் தசைகளில் திடீரெனக் கடும் வலி தோன்றி, மூச்சுவிடுவது கடினமாகிறது. வலி காரணமாக, காய்ச்சலும் தோன்றுகிறது. இந்நோய் ஒரு வாரம் நீடிக்கும். இதற்குச் சிகிச்சை எதுவுமில்லை.

Borrelia : பொரிலியா : இது ஒரு சுருளுயிரிக் கிருமி.மீள் காய்ச்சலை உண்டாக்கும். ஃபிரான்ஸ் நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் அமெடீபொரெல் இக்கிருமியைக் கண்டுபிடித்தார்.

பொரிலியா பர்ஜிடோர்பெரி : லைம் நோயை உருவாக்கும் கிருமி.

பொரிலியா டுட்டோனி : உண்ணிகளால் பரவும் மீள் காய்ச்சலை உண்டாக்கும் கிருமி.

பொரிலியா ரெக்கரிண்டிஸ் : பேன்களால் பரவும் மீள் காய்ச்சலை உண்டாக்கும் கிருமி.

பொரிலியா வின்சென்டை : வாய் அழுகல் புண்ணை ஏற்படுத்தும் கிருமி.

bossing : வட்டமேடு; உருண்டை மேடு : பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் காணப்படும் மேடு முன் மண்டையோட்டிலும் பக்கவாட்டு மண்டையோட்டிலும் வட்டவடிவில் உருண்டையாகத் திரண்டு காணப்படும் மேடு இது.

Botallo's duct : பொட்டல்லோ நாளம்; ஒருவகைத் தமனி நாளம் : இத்தாலி நாட்டின் அறுவைச் சிகிச்சை வல்லுநர் லியோநார்டோ பொட்டல்லோ இனம் கண்ட இரத்த நாளம்.

bottle feeding : புட்டிப்பால் ஊட்டல்; புட்டிப்பால் கொடுத்தல் : தாய்ப்பால் இல்லாத நேரங்களில் மாட்டுப்பாலை புட்டிகளில் அடைத்து, அதன் முனையில் இருக்கும் ரப்பர் காம்பின் வழியாகக் குழந்தைக்குப் பால் ஊட்டுதல். தாய்ப்பாலுக்கு மாற்றுணவு.

botulin : பொட்டிலின் : மிகக் கொடிய நரம்பு நச்சு.

botulism : தகர நச்சு : தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேரத்திற்குள் குரலிழப்பும் ஏற்படக்கூடும். எனவே, தகரக் கலங்களில் இடப்பட்ட காய்கறிகள், உணவுப் பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும்.