பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Boyle's law

219

Bradford frame


மயக்கவியல் வல்லுநர் 'பாயில்' என்பவர் வடிவமைத்த கருவி. அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிக்கு உணர்வு இல்லா நிலையை உண்டாக்குவதற்கும், அவருக்குத் தேவையான பிராண வாயுவைத் தருவதற்கும் பயன்படும் கருவி.

Boyle's law : பாயிலின் விதி : “ஒரு வாயுவின் கன அளவு அதிகரித்தால் அதன் அழுத்தம் குறையும். வாயுவின் அழுத்தம் அதிகரித்தால் அதன் கனஅளவு குறையும்" என்பது பாயிலின் விதி. இங்கிலாந்து இயற்பியலாளர் ராபர்ட் பாயில் என்பவர் இந்த விதியைக் கண்டுபிடித்தார்.

Brace : உறுப்புக் கவ்வி; பல்கல்வி; பல்பிடிப்பி : சிதைந்த எலும்பு களையும் நார் பிணையங்களையும் தாங்கும் உலோகக் கருவி.

brachial : மேற்கை சார்ந்த : மேற்கை மண்டலத்திலுள்ள நாளங்கள் கழுத்தின் அடியிலுள்ள நரம்புப் பின்னல் ஆகியவற்றை இது குறிக்கிறது.

brachialis : மேற்கைக்கீழ்த் தசை : மேற்கை இருதலைத் தசைக்குக் கீழ்ப்புறம் அமைந்துள்ள தசை.

brachial artery : மேற்கைத்தமனி : மேற்கைக் குருதி நாளம்.

brachiocephalic : கைத் தலைத் தொடர்பு : கைக்கும் தலைக்கும் தொடர்புடைய.

brachial artery : மேற்புயத்தமனி.

brachioradialis : முன்கைப் பக்க தசை : முன்கையின் பக்க வாட்டில் அமைந்துள்ள தசை.

brachium : மேற்கை; மேலங்கம்; புயம் : தோள்முதல் முழங்கை வரையுள்ள கையின் பகுதி, கை போன்ற ஒர் இணைப்புறுப்பு.

brachycephalic : சைப்பைத் தலை : குட்டையாகவும் அகலமாகவும் காணப்படும் தலை.

brachydactyly : குட்டை விரல்; சிறு விரல் : கை, கால் விரல்கள் குட்டையாக இருப்பது.

brachygnathia : மிகக் குருந்தாடை : முகத்தில் உள்ள கீழ்த் தாடை இயல்பில்லாமல் மிகவும் குட்டையாக இருப்பது.

bracket : அடைப்பு; வளைவு; நெருக்குக் கம்பி : மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி.

Bradford frame : பிராட்ஃபோர்ட் படுக்கை : நோயாளிகளைத் தூக்கிச் செல்லப்பயன்படும் தூக்குப் படுக்கை (ஸ்டிரச்சர்) போன்ற அமைப்புடைய ஒரு படுக்கை இது முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்கும், உடலும், முதுகுத் தசையும் படிந்திருப்பதற்கும், உருத்திரிபு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது.