பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bradosol

220

bran


Bradosol : பிராடோசல் : டோமிஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

brady : வேகக்குறை; மெதுவாக குறைவு; குறைந்த : இது ஒர் இணைப்புச் சொல்.

bradyarrhythmia : சீரிலாகுறை இதயத் துடிப்பு; சீரற்ற குறை இதயத் துடிப்பு : இதயத் துடிப்பு சீரற்றும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும் நிலை.

bradycardia : தவர் நெஞ்சுப்பைத் துடிப்பு; குறை இதயத் துடிப்பு; இதயக் குறைத் துடிப்பு : இதயம் பொதுவான வீதத்தில் சுருங்குவதால் உண்டாகும் மெதுவான நாடித்துடிப்பு. காய்ச்சல் இருக்கும்போது, உடல்வெப்பநிலையில் ஏற்படும் ஒருபாகை உயர்வுக்கும் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 10 துடிப்புகள் வீதம் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்க வில்லையானால் அது தளர் நெஞ்சுத் துடிப்பு எனப்படும்.

bradykinesia : வேகக்குறை இயக்கம் : வேகம் குறைந்த அசைவுகள்.

bradypnoea : சுவாசக் குறை; குறைமூச்சு; மூச்சு வேகக்குறை : வேகம் குறைந்த சுவாசம். சுவாச எண்ணிக்கைக் குறைவாக இருத்தல். சராசரி மனிதனின் இயல்பான சுவாச எண்ணிக்கை நிமிடத்திற்கு 18 முறை. இந்த அளவிற்குக் குறைவாக மூச்சு எண்ணிக்கை இருந்தால் அதை 'குறைமூச்சு' என அழைப்பர்.

braille : பிரெய்லி முறை; பார்வை அற்றோர் படிப்பு : ஃபிரான்ஸ் நாட்டின் பார்வையிழந்த கல்வியாளர் லூயிஸ் பிரெய்லி என்பவர், பார்வையற்றவர்கள் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்டுபிடித்த ஒரு படிப்பு முறை.

brain : மூளை : அறிவின் இருப்பிடம். இது மையநரம்பு மண்ட லத்தின் மிகப்பெரிய பகுதி. இது மண்டை ஓட்டின் உட்குழிவினுள் அமைந்துள்ளது. இதனை, மூளை வெளியுறை எனப்படும் மூன்று சவ்வுப் படலங்கள் சூழ்ந்திருக்கின்றன. மூளையினுள் இருக்கும் திரவம், நுட்பமான நரம்புத் திசுக்கள் அதிர்ச்சியைத் தாங்குவதற்கு உதவுகின்றன.

brain-case : மண்டையோடு.

brain-tag : மூளைத்தளர்ச்சி.

brain-fever : மூளைக் காய்ச்சல்.

brain-pan : கபாலம்.

brain tumour : மூளைக் கட்டி; மூளைக் கழலைக் கட்டி.

bran : தவிடு : தானியங்களில் புறப்பகுதியாக அமைந்துள்ள குத்துமி. குறிப்பாகக் கோதுமையிலுள்ள தவிடு, இழைமச்சத்து நிறைந்தது; வைட்டமின் -B தொகுதியும் இதில் நிறைந்துள்ளது.