பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

branchial

221

breast


branchial : செவுள் சார்ந்த : மனிதக்கருவிகள் கழுத்தின் இரு பக்கங்களிலும் உண்டாகும் பிளவுகள் அல்லது வெடிப்புகள். இவை முக்கு, காதுகள், வாயு ஆகிய உறுப்புகளாக உருவாகின்றன. செவுள் வெடிப்புகள் இயல்புக்கு மீறுதலாக ஏற்படும் கழுத்தில் செவுள் நீர்க்கட்டி உண்டாகிறது.

Brandt andrews technique : பிராண்ட் ஆண்ட்ரூஸ் உத்தி : மகப்பேற்றுக்கான ஒருவகை உத்தி. இதில் அடிவயிற்றில், தொப்பூள் கொடியினைப் பிடித்துக் கொண்டு கருப்பையை மேலே தூக்குகிறார்கள். அவ்வாறு தூக்கும்போது நஞ்சுக் கொடியானது கருப்பையின் அல்லது யோனிக் குழாயின் மேற்பகுதியில் இருக்கும். பின்னர், மேலே தூக்கப்பட்ட கருப்பையின் உச்சிப் பரப்பின் கீழே அழுத்தம் கொடுக்கும் போது நஞ்சுத் திசு உறுப்பு வெளியே வருகிறது.

brash : பித்த வாந்தி.

brassy cough : முழக்க இருமல்; வெண்கல ஒலி இருமல் : சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் ஒரு வகை வரட்டு இருமல். குரல்வளை மூச்சுக் குழாய் அழற்சி நோயின்போது இவ்வகை இருமல் ஏற்படும்.

Braun's frame : உலோகக்கட்டுப் பட்டை : புண்களுக்குக் கட்டுப் போடுவதற்காகப் பயன்படும் ஒர் உலோகப்பட்டை கூண்டு. முறிவேற்பட்ட முன்கால் எலும்புகளில் கட்டுப்போடுவதற்கு இது பயன்படுகிறது.

brawn : தசை நார் : கொழுந்தசை.

brawned : தசையுள்ள.

brawny : தசைப் பற்றுள்ள.

brawny induration : பிராணி தடித்தல்; கடினமாதல் : நோயின் காரணமாக உடல் திசுக்கள் தடித்தல்; கடினமாதல் இறுகுதல்.

Braxton Hicks contractions : பிராக்ச்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் : பெண்கள் கருவுற்றிருக்கும் போது, பிரசவ நேரத்தை நெருங்கும் காலத்தில், கருப்பைச் சுவர்கள் வலி கொடுக்காமல் சுருங்கும் நிலை. இங்கிலாந்து நாட்டின் பேற்றியலாளர் பிராக்ச்டன் ஹிக்ஸ் என்பவர் இதனைக் கண்டறிந்து கூறியதால் இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

breast : மார்பகம்; முலை; நகில் : (1)பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் உறுப்பு. (2) மார்புக் கூட்டின் புற மேற்பகுதி.

மார்பகம்