பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

brightness

223

Brock's syn...


brightness : ஒளிர்வு.

'Brietal : பிரைட்டல் : மெத்தோ ஹெக்சிட்டோன் சோடியம் என்னும் மருந்தின் வணிகப்பெயர்.

Bright's disease : பிரைட் நோய் : சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படும் நோய் வகை.

brilliant green : பிரில்லியன்ட் கிரீன் : நோய்க் கிருமியை ஒழிக்கும் திறனுள்ள அவுரியிலிருந்து எடுக்கப்படும் சாயப் பொருள். கழுவு நீர்மமாகப் (1:1000) பயன்படுகிறது.

brim : விளிம்பு.

Brinaldix : பிரினால்டிக்ஸ் : கிளாப் பாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

brittle bone syndrome : நொறுங்கெலும்பு நோயியம்; உடையும் எலும்பு நோயியம் : எலும்பு வலுவிழத்தலால் எளிதில் உடையக் கூடிய அல்லது நொறுங்கக் கூடிய நிலைமை.

broach : பற்கூழ் நீக்கிக் கருவி : பற்சிதைவு நோயின்போது பற்கூழையும் அதைச் சார்ந்த சிதைவுத் திசுக்களையும் அகற்ற உதவும் ஊசிமுனைக் கருவி. broad bandage : அகலக்கட்டு.

broad ligament : அகல நாண்பிணையம் : இடுப்புக் குழிக்குள் கருப்பையைப் பிணைத்திருக்கும் நாற்பட்டை வயிற்றில் உதரவிதானம், கல்லீரல் மற்றும் வயிற்று முன் சுவர்த்தசைகளைப் பிணைக்கும் நாற்பட்டை.

broad-spectrum : பல்முனை; பல ஆற்றல்; பல்வகை; வீரியம் நிறைந்த :பல்வேறு நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள, வீரியம் நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து.

Brocadopa : பிரோக்காடோப்பா : லெவோடோப்பா என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Broca's area : புரோக்கா மையப்பகுதி : பெருமூளையின் இடக் கோளார்த்தத்திலுள்ள பிளவின் தொடக்கத்தில் அமைந்துள்ள பேச்சு இயக்க மையம். இந்த மையம் காயமுற்றால், பேச இயலாது போதல் உட்பட மொழிக் குறைபாடு உண்டாகும்.

Broca index : பிராக்கா குறியீடு; பிராக்கா சுட்டு எண் : ஒரு வருடைய வயதிற்கும் உயரத்திற்குமேற்ப இருக்க வேண்டிய இயல்பான உடல் எடையைவிட 20 சதவிகிதம் அதிகமிருத்தல்.

Brock's syndrome : புருக் நோயியம் : இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ருசெல் புரூக் இனம்கண்டு அறிந்த நோயியம். இது ஒருவகை நுரையீரல் அழற்சி அடைப்பு நோய். காசநோய் நிணநீர்க் கட்டிகளால் நுரையீரலின்