பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

brom-valetone

225

bronchiole


brom-valetone : புரோம்வாலெட்டோன் : ஒரு மென்மையான மயக்க மருந்து. கார்புரோமால் மருந்தினைப் போன்றது.

bronchi : மூச்சுக்குழாய்கள் : மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.

மூச்சுக் குழாய்கள்

bron-chial asthma : மூச்சுக் குழாய் ஈளை நோய் : ஒவ்வாமைப் பொருள்களை உட்கொள்ளுதல், நோய்த் தொற்று, உடற்பயிற்சி, உணர்ச்சி வயப்படுதல் காரணமாக மூச்சுக் குழாயில் காற்றுத்தடை உண்டாகி ஏற்படும் ஈளை நோய்.

bronchial tubes : மூச்சு நுண்குழாய்கள் : மூச்சுக்குழாய்கள் சுவாசப் பைகளுள் நுழைந்த பிறகு பல பிரிவுகளாகப் பிரியும் நுண்குழாய்கள்.

bronchiectasis : மூச்சுக்குழாய் தளர்வு; சுவாசக் குழல் விரிவு : நுரையீரலில் மூச்சுக்குழல்கள் இயல்புக்கு மீறி விரிந்திருத்தல். இந்த விரிவுநிலை எப்போதும் நிலைபெற்றதாக இருக்கும். மூச்சுக்குழல் சுவர்களில் அணுக்கள் சிதைவுற்றிருக்கும். இது மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும். மூச்சுக் குழல் விரிவடைந்துள்ள அளவு அதில் ஏற்படும் நோய்த்தொற்று அளவு மற்றும் அங்கு உண்டாகும் சுரப்பு நீர் அளவு இவற்றைப் பொறுத்து நோயின் அறிகுறிகள் வெளிப்படும். இதனால் பாதிக்கப்படும் நபருக்குத் தொடர்ச்சியாக சளியும் இருமலும் வந்து கொண்டிருக்கும். படுக்கும் போது இருமல் அதிகரிக்கும்.

மூச்சுக்குழாய் தளர்வு உலர்ந்த நிலை : இந்த நிலைமையின் போது மூச்சுக் குழல்களில் நோய்த்தொற்று இருப்பதில்லை. ஆனால், வறட்டு இருமல் தொல்லை தரும் சமயங்களில் இருமலோடு சளியில் இரத்தமும் வெளியேறும்.

bronchiole : மூச்சு நுண்குழாய்; மூச்சுக் குழாய் நுண்பிரிவு; சுவாச நுண்குழல்; மூச்சு நுண்குழாய் : மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் காணப்படுகின்றன. இவை மென் தசைகளால் ஆனவை. இவை மேலும் பிரிந்து பிராண வாயுவைப் பகிரும் மூச்சு நுண்மக் குழல்களாக அமை