பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bronchiolectasis

226

bronchodilatation


கின்றன. வேற்றைச் சுற்றி நுரையீரல் கட்டமைப்பின் கடைத்தளமான மூச்சு நுண்ணறைகள் அமைந்து உள்ளன.

bronchiolectasis : மூச்சு நுண் குழாய் தளர்வு; சுவாச நுண் குழாய் விரிவு : மூச்சு நுண் குழல்கள் விரிந்த நிலையில் இருத்தல்.

bronchiolitis : மூச்சு குழாய் நுண்பிரிவு வீக்கம்; மூச்சு நுண் குழாய் அழற்சி : மூச்சுக்குழாய் நுண் பிரிவுகள் வீக்கமடைதல். பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் ஏற்படும்.

bronchioloalveolar carcinoma : மூச்சு நுண்ணறைப் புற்றுநோய் : அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, மூச்சுத் திணறல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும்.

bron chitic : மூச்சுக் குழாய் அழுற்சி உள்ள; சுவாசக் குழல் அழற்சி உள்ள.

bronchium : மூச்சுக் குழாய்.

bronchitis : மார்புச்சளி நோய்; மூச்சுக்குழாய் அழற்சி : பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், சில சமயம் காற்று தூய்மைக் கேட்டினாலும் இந்தச் சளி ஏற்படுகிறது. கடுமையான சளிப்பிடிப்பினால், மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இளைப்பும், மூச்சு அடைப்பும் உண்டாகலாம்.

bronchocele : மூச்சுச் சிறுகுழாய் வீக்கம் : மூச்சுக்குழாயின் ஒரு பகுதித் தளர்வால் விரிவடைதல்.

bronchoconstrictor : மூச்சுக்குழாய்ச் சுருக்க மருந்து : மூச்சுக் குழாய்களைச் சுருங்கச் செய்கிற மருந்து.

bronchoconstriction : மூச்சுக்குழாய் ஒடுக்கம்; மூச்சுக் குழாய் சுருக்கம் : மூச்சுக்குழாய்கள் உள் அளவில் சுருங்குதல்.

bronchodilator : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்து; மூச்சுக் குழாய் தளர்த்தி : மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்வதற்கான மருந்து.

bronchodilatation : சுவாசக் குழல் தளர்ச்சி; மூச்சுக்குழாய் தளர்ச்சி : சுவாசக் குழல்களின் உள்விட்டம் அதிகரித்தல்.