பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bronchopneumonia

228

bronchostenosis


bronchopneumonia : மூச்சுக்குழாய் சீதசன்னி; நுரையீரல் அழற்சி; குழல் நிமோனியா : மூச்சுக் குழாயின் சுற்றுப் பகுதிகளில் ஏற்படும் ஒருவகைச் சீத சன்னி (நிமோனியா).

bronchopulmonary : நுரையீரலும் மூச்சுக் குழலும் இணைந்த : முச்சுப்பெருங்குழல் துவங்கி மூச்சுக்காற்று அறைகள் வரை துரையீரலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் குறிப்பது. ஒரு பகுதி நுரையீரலுக்குப் பிரான வாயுவை அளிக்கின்ற மூச்சுக் குழல் பகுதி.

branchorrhoea : மூச்சுக்குழாய் சளிப்பிடிப்பு : மூச்சுக்குழாய் சளிச்சவ்வுப் படலத்திலிருந்து அளவுக்கு அதிகமாகச் சளி வெளியேறுதல். -

bronchoscope : மூச்சுக்குழாய் நோக்கி; சுவாசக் குழல் நோக்கி : துரையீரலின் உள்பகுதிகளைக் காண்பதற்குப் பயன்படும் கருவி. இதன் உதவியால் நுரையீரலிலும் மூச்சுக்குழாய்களிலும் உள்ள சுரப்பு நீர்களையும் அந்நியப் பொருள்களையும் வெளியேற்ற இயலும், நுரையீரலிலும் மூச்சுக் குழாய்களிலும் உள்ள நோய்களை உறுதி செய்வதற்கு அங்குள்ள திசுக்களை சிறிதளவு வெட்டி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பவும் இக்கருவி பயன்படுகிறது.

bronchoscopy : மூச்சுக்குழல் உள்நோக்கல்; சுவாசக் குழல் உள்நோக்கல் :வளையும் தன்மை உள்ள மூச்சுக்குழல் நோக்கியின் உதவியால் நுரையீரலின் உள் பகுதிகளைக் காணல்.

bronchosinusitis : மூச்சுக் காற்றறை அழற்சி : கீழ் சுவாசப் பாதையிலும் மூச்சுக் காற்றறைகளிலும் அழற்சியுள்ள நிலைமை.

bronchospasm : மூச்சுக்குழாய் சுருக்கம் : மூச்சுக் குழாய்ச் சுவர்களில் உள்ள இயங்கு தசைகள் சுருங்குவதன் காரணமாக மூச்சு நுண் குழாய்கள் திடீரெனச் சுருக்கமடைதல்.

bronchospirometer : மூச்சுமானி.

bronchospirometry : மூச்சுக்குழாய் அளவி சோதனை; சுவாச அளவி சோதனை : ஒரு நபரின் சுவாச ஆற்றலை அல்லது அவருடைய துரையீரல் மற்றும் மூச்சுக் குழல்களின் சுவாச ஆற்றலை 'சுவாச அளவி' எனும் கருவி மூலம் கண்டறியும் சோதனை.

bronchostaxis : மூச்சுக்குழாய் குருதிக் கசிவு : மூச்சுக்குழாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது கசிதல்.

bronchostenosis : மூச்சுக் குழாய் சுருக்கம்; மூச்சுக்குழாய் ஒடுக்கம்; மூச்சுக்குழாய் இறுக்கம்; மூச்சுக் குழாய் நெருக்கம் : மூச்சுக் குழலின் உள்விட்டம் சுருங்குதல்.