பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bumetanide

231

burette


இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன.

bumetanide : பூமொட்டானைடு : வீரியச் சிறுநீர் பெருக்கி மருந்து,

bunion : கால்வீக்கம்; பெருவிரல் முண்டு : கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது.

பெருவிரல் முண்டு

bunionelle : கட்டைவிரல் வீக்க நோய்; கால்சிறுவிரல் வீக்க நோய் : காலில் உள்ள கட்டை விரலில் (சிறுவிரல்) மசகுநீர்ப் பை அழற்சியுறுவ தால் உண்டாகும் வீக்கம்.

Bunsen burner : புன்சன் அடுப்பு : ஜெர்மன் வேதியியலாளர் ராபர்ட் புன்சன் வடிவமைத்த அடுப்பு. மாட்டுச் சாண வாயுவால் எரியக் கூடியது. எரி தழலை அதிகப்படுத்தவும், குறைத்துக் கொள்ளவும் வசதி கொண்டது. தேவைப்படும் போது அடுப்பை எரித்துக் கொள்ளவும், தேவையில்லாத போது அடுப்பை அணைத்து விடவும் வசதி உள்ளது.

bunyavirus : புனியா வைரஸ் : "ரைபோ நூக்ளிக் அமிலம்' வைரஸ் வகையைச் சார்ந்த ஒரு வகை வைரஸ் இனம். ஆர்பேர் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

bupthalmos : கண்விழி புடைப்பு நோய்; மாட்டுவிழி : பிறவியிலேயே ஏற்படும் கண்விழி விறைப்பு நோய்.

bupivacaine : பூபிவாக்கைன் : நீண்டநேரம் செயற்படக்கூடிய உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்துகளில் ஒன்று. இது நரம்பு மண்டலத்திற்கு ஏற்புடையது. கோக்கைனை விட நச்சுத்தன்மை குறைந்தது.

buprenorphine : பூப்பிரினோர்ஃபின் : ஒருவகை நோவகற்றும் மருந்து. இது மார்ஃபினைவிட நீண்ட நேரம் செயல்படக் கூடியது.

bur : கணையம் : வயிற்றுச் சுரப்பி வகை.

burette : உறிஞ்சுகுழல்; உறிஞ்சளவி : திரவங்களை உறிஞ்சி