பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




C

C : "சி" (C) : கார்பன், சென்டி கிரேடு, செல்சியஸ், கழுத்து சார்ந்த முள்ளெலும்பு (C1 முதல் C7), கிலோ கலோரி, நிரப்புக் கோணம் (C1 முதல் C9) ஆகியவற்றுக்கான குறியீடு.

CA : சி.ஏ. (C.A) : காப்புமூலத்துடன் தொடர்புடைய ஒரு கட்டி. 'முசின்' என்ற புரதக் கலவை, சில குருதிக்குழுமங்கள் தொடர்புடைய திசுக்களில் காணப்படுகிறது.

CA 125 : சி.ஏ.125 : வயிற்று மேல் தோல் இழைமத்திலிருந்து பெறப்படும் திசுக்களினால் உற்பத்தி செய்யப்படும் ஓர் உயிரணு மேல்பரப்பு இளைக் கோபுரதம். இது கரு அண்டப் புற்று. கருப்பைவாய் சுரப்பிப் புற்று, இரைப்பைக் குடல் குழாய் புற்று, மார்பகப்புற்று போன்ற தோலிழைமப் புற்றுடன் தொடர்புடையது.

Ca : சி.ஏ (Ca) : கால்சியம் என்ற தனிமம். எலும்புத் தசைப்புற்று (carcinoma) ஆகியவற்றைக் குறிப்பிடும் குறியீடு.

CABG : சி.ஏ.பி.ஜி : நெஞ்சுப்பை நாள பக்கவழி அறுவைச் சிகிச்சைக் கான சுருக்கம்.

CaCL2 : கால்சியம் குளோரைடு.

Cacao : கொக்கோ : அமெரிக்க வெப்ப மண்டலத்தில் வளரும் "கொக்கோ' என்ற மரத்தின் விதை. இதிலிருந்து இன்பசைத் தின்பண்டம் (சாக்லேட்), கோக்கோ வெண்ணெயால் தயாரிக்கப்படுகிறது.

cachaemia : இரத்தக் கோளாறு.

cachectic : உடல்நலக்குறையான, மனநிலை பாதித்த.

cachet : மருந்துப்பொதியுறை; மருந்துக்குளிகை; மருந்துச்சிமிழ் : கசப்பான தூள் மருந்தினைப் பொதிந்துவைக்க உதவும் சிறு மருந்துப் பொதியுறை அல்லது மருந்துறை.

cachexia : உடல் உருக்கி நோய்; உடல் மிகை மெலிவு; கடு நலிவு : உடல் நலக்கோளாறு, ஊட்டச் சத்துக் குறைபாடு, பொதுவான உடல்நோய்நிலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். உடல் மெலிதல், மேல்தோல் வெளியேறுதல், கண்களின் ஒளி குன்றுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

cacogastric: வயிற்றுக் கோளாறு.

cacogeusia : அருவருப்புச் சுவை : வாயில் ஏற்படும் அருவருப்பான சுவை.

cacophthamia : ஒரு வகை கண்நோய்.