பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cacosmia

236

Caecum


cacosmia : அருவருப்பு வாடை : வெறுப்பூட்டும் நாற்றம்.

cacumen : காகுமென் : சிறு மூளையின் மேல்புறத்திலுள்ள புழுபோன்ற அமைப்பின் முன்புறப் பகுதி.

CAD : சி.ஏ.டி : நெஞ்சுப்பைத் தமனி நோய் (coronary artery disease) என்பதன் சுருக்கம்.

cadaver : பிணம் : மருத்துவத்தில் இச்சொல் ஒரு பிணத்தைக் குறிக்கும். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் அறுத்துச் சோதிக்கும், உடலையும், பிணவறையில் பிணப்பரிசோதனை செய்யப்படும் உடலையும் இது குறிக்கிறது.

cadaveric spasm : பிண விறைப்பு : சில திடீர் மரணங்களில் தசை விறைப்பு தொடர்ந்து நீடித்தல்.

Cadmium : காட்மியம் : தகரம் போன்ற வெண்ணீல உலோகம், இது துத்தநாகத் தாதுப் பொருள்களில் உள்ளது. பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப் படுகிறது. இதன் புகையைச் சுவாசித்தால் நாளடைவில் நுரையீரல் சேதம் அடையும். காட்மியம் கலந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்தால் உணவு நஞ்சாகும்.

caduceus : கைத்தண்டம் : புராணக் கதையின்படி கிரேக்க ஞாயிற்றுக் கடவுளான அப்போலோவின் கையிலுள்ள கைத்தண்டம். இதில் இரண்டு இறகுகளின் மேல் ஒரு தண்டத்தைச் சுற்றி இரு பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கும்.

caecal : குடல் சார்ந்த : பெருங்குடல் முற்பகுதி தொடர்புடைய.

caeciform : குடல்வால் வடிவான.

Caecitis : குடல்வால் அழற்சி.

caecotomy : பெருங்குடல் வாய் பற்றுக்குழாய் அறுவை மருத்துவம் : பெருங்குடல் வாய்க்கும் அடி வயிற்றுச்சுவரின் முன் புறத்திற்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படும் பற்றுக்குழாய். பெருங்குடல் வாயினுள் ஒர் அகன்ற துளைக் குழாயினைச் செருகி இது ஏற்படுத்தப்படுகிறது. மலம் சீராகக் கழிவதற்கு இது உதவுகிறது.

Caecum : பெருங்குடல் வாய்; பெருங்குடல் முளை : பெருங்

பெருங்குடல் முளை