பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ca EDTA

237

cain complex


குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிறது.

Ca EDTA : கேயட்டா : கால்சியம் டைசோடியம் எடிட்டேட். இது ஈய நச்சு நீக்கியாகவும், சுண்ணாம்பு நீற்று புண்களை ஆற்றும் மருந்தாகவும் பயன் படுகிறது.

caesarian hy sterectomy : வயிற்று அறுவை மகப்பேறு : வயிற்றைக் கீறி கருவகத்தில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கும் அறுவைச் சிகிச்சை முறை.

caesarean section : கருப்பை அறுவை மருத்துவம் : வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்தும் அறுவை மருத்துவ முறை. ரோமானிய முதல் பேரரசர் ஜூலியஸ் சீசர் இந்த முறையில் பிறந்ததாகக் கூறுவர். எனவே அவர் பெயரால் இது 'சீசேரியன் முறை' என்று அழைக்கப்படுகிறது.

caesium 137 (137Cs) : சீசியம் 137 : நீல ஒளி வரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற கதிரியக்க உலோகம். 'கோபால்ட்' என்ற உலோகத்திற்குப் பதிலாக ஒளிக்கற்றை மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது. ஊகிகளாக அல்லது குழாய்களாக முத்திரை இடப்பட்டு, ரேடியத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

cafe coronary : அருந்தக முகடு : உணவுக் குளிகையினால் மேற் புறக் காற்று வழி முற்றிலுமாகத் தடைப்படுதல். உணவுக்குழாய், குரல்வளை இரண்டிலும் குழல் அடைப்பு உண்டாகும். இந்த அறிகுறிகள் நெஞ்சுத்தசை அழிவைத் தூண்டிவிடும்.

caffeine : காஃபின் : காப்பி, தேயிலை போன்ற குடிவகைகளில் உள்ள மைய நரம்பு மண்டலத்திற்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய மர உப்புச்சத்து. இது சிறுநீர் பெருக்கியாகக் கொடுக்கப்படுகிறது. எனினும், முக்கியமாக நோவகற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

cain complex : கெயின் மனப்பான்மை : அழித்திடும் தன்மையுள்ள சகோதர விரோதம். இதில் உடன்பிறந்தவர்களில் ஒருவர், பெற்றோரின் ஆதரவைப் பெற்றமைக்காக மற்றொரு உடன்பிறப்பின் மீது விரோதம் காட்டுகிறார். விவிலியத்தில் ஆதாம், ஏவாளின் மகனான கெயின், தனது சகோதரன் அபெலை இந்த விரோதத்தினால் கொன்றுவிடுகிறான். அந்தக் கெயின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.