பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calmodulins

242

caloris bursa


நோய்ச் சிகிச்சைக்குப் பயன் படுத்தப்படும் ஒரு கிருமி. திரும்பத் திரும்ப வளர்ப்பதன் மூலம் இது தனது வீரியத்தை இழக்கிறது. காசநோயைக் குணப்படுத்துவதற்கு அம்மை மருந்து மூலம் செலுத்தப்படுகிறது. ஃபிரெஞ்சு பாக்டீரியாவில் அறிஞர்கள் ஆல்பெர்ட் கால் மெட்டு, காமில் குவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

calmodulins : கால்மோடுலின் : நாளங்களுக்கிடையிலான புரதம். இது கால்சியத்துடன் இணைந்து, பல்வகை நாளச் செயல்முறைகளைத் தூண்டிவிடுகிறது.

calor : வீக்க வெப்பம்; உடல் வெப்பம்; தோல் வெப்பம்; வெப்பக் கூறு :வீக்கத்தின் போது ஏற்படும் நான்குவகை அறிகுறிகளில் ஒன்று வெப்பம்.

caloric test : கலோரிச் சோதனை; வெப்பச் சோதனை : புறக் காதுக் குழாயினுள் சூடான அல்லது குளிர்ந்த திரவத்தைப் பாய்ச்சிக் காது மையப்புழையில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டு அறிவதற்கான சோதனை. காதில் நோயில்லாமல் இருந் தால், காதில் 'நிஸ்டாக்மஸ்' என்ற பொருள் இருக்கும். நோயுற்ற காதில் இந்தப் பொருள் உற்பத்தியாவதில்லை.

calorie : கலோரி; வெப்ப அலகு; கனலி : வெப்ப அளவை அலகு. நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோகிராம் நீரின் வெப்பத்தை ஒரு பாகை சென்டி கிரேடுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். அறிவியலில் பொதுவாக கலோரிக்குப் பதிலாக ஒர் அலகு ஆற்றல் பணி, வெப்பத்தை குறிக்க 'யூல்' என்ற அலகு பயன் படுத்தப்படுகிறது. ஒரு 'யூல்' என்பது ஏறத்தாழ 1/4 கலோரி.

calorific value : வெப்ப அளவு : உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.

calorigenic : வெப்பம் சார்ந்த : வெப்பம் அல்லது சக்தியின் உற்பத்தி தொடர்புடைய.

calorimeter : கனல்மானி : சூட்டின் அளவு காட்டும் கருவி.

calorimetry : கனலளவை.

caloris bursa : கலோரி சுரப்பி : பெருந்தமனிக்கும், மூச்சுக் குழாய்க்குமிடையில் காணப்படும் மசகுநீர்ச்சுரப்பி. இத்தாலிய உடல் உட்கூறியலறிஞர் லூகி கலோரி பெயரால் அழைக்கப் படுகிறது.