பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

campimeterவ்

244

cancer


இருமல் மருந்துகளில் கற்பூரம் கலந்த அபினிக் கரைசலாகச் சேர்க்கப்படுகிறது. கற்பூர எண்ணெய் நோவகற்றுவதற்கு வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது.

campimeter : பார்வைப் பரப்பு அளவுமானி : பார்வைப் பரப் பெல்லையை அளவிடும் ஒரு சாதனம.

campylobacter : காம்பிலோ பாக்டர் : கிராம் சாயம் எடுக்காத, நகரும் திறனுடைய நீண்ட பாக்டீரியம். இது பல நாட்கள் நீடிக்கக் கூடிய கடுமையான வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.

canal-alimentary : உணவுப்பாதை.

canal birth : பிறப்புப் பாதை.

canal vaginal : யோனிக் குழாய்.

canaliculotomy : எலும்புக் குழாய் மாற்று மருத்துவர் : 'கானலி குலஸ்' என்ற உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பின் பிற்பகுதிச் சுவரைத் துண்டித்து விட்டு, வடிகால் குழாயினை ஒர் எலும்புக் கால்வாயாக மாற்றுதல்.

canaliculus : கானலிகுலஸ்; மென்குழாய்; நுண்கால்வாய்; சிறு குழல் : உடலிலுள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. புருவத்தின் விளிம்பிலிருந்து, கண்ணிர்ப்பை வரையுள்ள குழாய் இதற்கு எடுத்துக்காட்டு.

cancellous : கடற்பஞ்சுத் தன்மையுடைய; புரைத்தமென் எலும்பாகிய : எலும்புகளில் இழை யிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற தேன் கூடு போன்ற தன்மையுடைய.

cancellous bone : மெல்லெழும்பு.

canalisation : செல்வழியாக்கம் : திசுவில் செல்வழிகள் உண்டாகுதல்.

cancer : புற்றுநோய்; புற்று : உடலின் எந்தப் பகுதியிலுள்ள தாறுமாறான வளர்ச்சி எதனையும் இது குறிக்கிறது. இந்த வளர்ச்சி தேவையின்றி ஏற்படுகிறது, உடலிலுள்ள சத்துப் பொருள்களை ஒட்டுண்ணி போல் உண்டு வளர்கிறது. இது

புற்றுநோய் புற்று