பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cancerate

245

caninetooth


உறுப்புகளை உள்ளிருந்து அழிக்கிறது. அண்டைத் திசுக்களைத் தாக்கி உறுப்புகளை உருமாற்றுகிறது.

cancerate : புற்றுவை.

cancerous : புற்றுநோய் போன்ற; புற்றுநோய் கொண்ட.

cancerocidal : புற்றுக்கொல்லி : புற்று நோய்க்கொல்லி மருந்து.

cancerophobia : புற்றுநோய் கிலி; புற்று நோயச்சம்; புற்று மருட்சி : புற்றுநோய் பற்றிய அளவுக்கு மீறிய அச்சம்.

cancerous : புற்று சார்ந்த : உக்கிரமான வளர்ச்சி தொடர் புடைய.

cancrum : வாய்ப்புண் : 1. மிக விரைவாகப் பரவும் நைவுப் புண். 2. ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் வாயில் ஏற்படும் தசையழுகல் போன்ற நைவுப்புண்கள். இது 'போரியாலிஸ் வின்சென்டி' என்ற கிருமியால் உண்டாகிறது.

cancrum oris : குழந்தை வாய்ப்புண்; வாயழுகல் : நரம்புத் தளர்ச்சி யுடைய குழந்தைகளின் உண்டாகும் தசையழுகலுடன் கூடிய வாய்ப்புண். ஆஃப்ரிக்காவில் ஊட்டச்சத்துக் குறைவுடைய குழந்தைகளுக்குத் தட்டம்மை ஏற்படும்போது இதுவும் உண்டாகிறது.

candida : இருதிரிபுக் காளான் : இரு திருபுருப் படிவங்களையுடைய காளானில் ஒரு வகை. நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரணுக்களையுடைய இது சில வகை இழைமங்களை உண்டாக்குகிறது. இயற்கையில் பரவலாகக் கிடைக்கிறது.

candidaris : சள்ளை நோய்.

candidemia : குருதிக்காளான் நோய் : குருதியில் இருதிரிபுக் காளான்கள் இருத்தல்.

candidiasis : இருதிரிபுக் காளான் நோய்; சள்ளைநோய் : இரு திரிபு காளான்களில் ஒருவகையினால் உண்டாகும் ஒருவகை தொற்று நோய்.

Canine : கோரைப் பல் : நாய்க்கு இருப்பது போன்ற கோரைப் பல். ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப்பற்களுக்கும், முன்கடை வாய் பற்களுக்குமிடையில் இரு கோரைப்பற்கள் அமைந்து உள்ளன.

caninetooth : கோரைப்பல்; கோரப்பல் : நாய்க்கு இருப்பது போன்ற கோரைப்பல், ஒவ்வொரு தாடையிலும் உளிப்பல் எனப்படும் முன் வாய்ப் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கு மிடையில் இரு கோரைப் பற்கள் அமைந்து உள்ளன. இவற்றைக் 'கோரப் பற்கள்' என்றும் கூறுவர்.