பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

capeline bandage

247

capreomycin


கருவுறும்படி செய்வதற்கு இயல்விக்கிறது.

capeline bandage : தலைக்கட்டு.

capillary : தந்துகி : மயிரிழை போன்ற நுண்குழல்; நுண்புழை யுடைய.

capillarectasia : தந்துகி குழாய் விரிவாக்கம் : தந்துகிக் குழாயின் விரிவாக்கம்.

capitellum : எலும்புக்குமிழ் : விலா எலும்பு போன்ற ஒரு நீண்ட எலும்பின் முனையிலுள்ள குமிழ் போன்ற கொண்டை.

capitulum : எலும்புக்கொண்டை : ஒர் எலும்பின் முனையிலுள்ள எடுப்பான, சிறிய உருண்டைக் கொண்டை.

Caplan's syndrome : கேப்லான் நோய் : போலி கீல்வாத மூட்டு நோய் உடைய சுரங்கத் தொழிலாளர்கள், நுரையீரலில் போலிக் கீல்வாதக் கரணை நோய்க்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் கோலார் தங்க வயல் மருத்துவ மனையில் பணி ஆற்றிய பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் அந்தோணி கேப்லான் பெயரால் அழைக்கப் படுகிறது.

Capnocytophage : குருதியோட்ட நோய்க்கிருமி : வாய் உட்குழியில் காணப்படும் சூழ்நிலைத் தகவுத்திறனுள்ள, ஆக்சிஜன் இல்லாத கிராம்-எதிர்படி நோய்க்கிருமி. இது மண்ணிரல் இல்லாத நோயாளிகளிடம் குருதியோட்ட நோய்த்தொற்றினை உண்டாக்குகிறது.

capnography : கார்பன்டையாக்சைடு அளவு கருவி : உள் இழுக்கப்பட்ட கார்பன்டையாக்சைடின் அளவைத் தொடர்ந்து பதிவுசெய்தல்.

capnophilic : கார்பன்டையாக்சைடு பாக்டீரியா : கார்பன்டையாக் சைடு அடங்கியுள்ள சூழலில் சிறப்பாக வளரும் பாக்டீரியா.

capotement : சிதறல் ஒலி : விரிவாக்கிய இரைப்பையில் காற்றும், திரவமும் அடங்கி இருக்கும் போது கேட்கப்படும் சிதறல் ஒலி.

capping : காப்புறை அமைத்தல் : 1. பல்லின் வெளியில் தெரியும் சதைப்பகுதியின் மீது ஒரு காப்புப் பொருளை வைத்தல். 2. ஒப்பனை நோக்கத்துக்காக பல்லின்மீது ஒரு செயற்கை முகடு அமைத்தல். 3. செவிலித் தொழிலில் ஒர் ஆளை ஈடு படுத்துதல்.

capreomycin : கேப்ரியோமைசின் : மருந்தினால் குணமாகாத காச நோயாளிகளுக்கு சிரை வழி செலுத்தப்படும் ஒரு வலுவற்ற காசநோய் எதிர்ப்பு மருந்து. இது கானாமைசின், வயோமைசின்