பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carbidopa

249

carbonate


carbidopa : கார்பிடோப்பா : பார்க்கின்சன் நோய் எனப்படும் அசையா நடுக்க நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் லவோடோப்பா என்ற மருந்துடன் சேர்த்துப் பயன் படுத்தப்படும் டிகார்போக்சிலேஸ் தடுப்பான்.

carbimazole : கார்பிமாசோல் : கேடயச்சுரப்பு எதிர்ப்பு மருந்து. அயோடினும், டைரோசினும் இணைவதைத் தடுக்கிறது. இது, மெதில் தயோரா சிலைவிட வீரியம் மிக்கது. குறைந்த நச்சுத் தன்மையுடையது. கேடயச் சுரப்புக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

carbohydrate : கார்போஹைடிரேட் (கரிநீரகி); மாவுச்சத்து; மாவுப் பொருள் : மாச்சத்து வகை, சர்க்கரை, பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய கரிமக்கூட்டுப்பொருள். தாவரங்களில் இயற்கையில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையின்படி உருவாகிறது. கார்போ-ஹைட் ரேட்டுகள் வெப்பத்தை உண்டாக்கக் கூடியது.

carboluria : வண்ணச் சிறுநீர் : பசுமை நிறமான அல்லது அடர் வண்ணமுடைய சிறுநீர், கார்பாலிக் அமில நச்சின் போது கார்பாலிக் அமிலம் வெளியேறுவதால் இந்த நிறம் ஏற்படுகிறது.

carbon : கார்பன் (கரிமம்); கரியம்; கரி : உலோகத் தொடர்பற்ற தனிமம். உயிர்ப் பொருள்கள் அனைத்திலும் இது உள்ளது. கார்பன்டை யாக்சைடு என்னும் வாயுவாக உள்ளன. பல் உள்ளெரிதலிலும், வளர்ச்சிதை மாற்றத்திலும் இது ஒரு கழிவுப் பொருள். மூச்சு விடும்போது கார்பன்டையாக்சைடு வெளி ஏறுகிறது கார்பன்மானாக்சைடு ஒரு நச்சு வாயு.

carbon dioxide CO2 2 : கார்பன்டையாக்சைடு (CO2) : கார்பனின் இறுதியான வளர்சிதை மாற்றப் பொருள். இது நிறமற்ற, மணமற்ற வாயுக் கூட்டுப்பொருள். இது உணவில் அடங்கி உள்ளது. இது பெரும்பாலும் நுரையீரல்கள் வாயிலாகவும், சிறிதளவு சிறுநீர், வியர்வை வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. குருதி வடிநீரில் இருக்கும் CO2, அளவு, நீர்க் கலவைக் கரைசல் வடிவத்துடன் இணைந்து கார்போனிக் அமிலமாக உருவாகிறது. இது நோய் நீக்கக் குளிர்பதனத்தில் பயன்படுத்தப் படுகிறது.

carbonaemia : கார்போனிக் அமில மிகைக் குருதி : குருதியில் கார்போனிக் அமிலம் அளவுக்கு மிகுதியாக இருத்தல்.

carbonate : கார்போனேட் : கார்போனிக் அமிலத்தின் ஓர் உப்பு.