பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carbonic anhydrase

250

carbrital


carbonic anhydrase : கார்பானிக் நீர்நீக்கி : செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும் பகுத்துச் சிதைவதை ஊக்குவிப்பதன் மூலம் பல்லடிக் காற்றுக்கும் கார்பன்டையாக்சைடை மாற்றுகிறது.

carbon monoxide CO : கார்பன் மானாக்சைடு (CO2) : நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் விழப்பு, மிகை நரம்பியக்கம், மயக்கம், நரம்புச் சேதம், நெஞ்சுப்பைக் குருதிப்பற்றாக் குறை, நெஞ்சுப்பைப் பிறழ்வு இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும். எந்திரமுறைக் காற்றோட்டத்துடன் 100% ஆக்சிஜன் செலுத்தி இதற்குச் சிகிச்சை யளிக்கப்படுகிறது.

carbon tetrachloride CCI : கார்பன் டெட்ராக் குளோரைடு (CCl) : ஈதர் போன்ற மணமுடைய தெளிவான நிறமற்ற திரவம். இது நச்சுத் தன்மை யுடையது. இதனால், ஈரலிலும், சிறுநீரகத்திலும் கடுமையான செயலிழப்பு ஏற்படுகிறது.

carbonyl : கார்போனில் : கார்பன் மானாக்சைடின் ஈரணுடைய முலஅனு.

carboplatin : கார்போபிளாட்டின் : உயிரணு நஞ்சேற்றப் பொருள் அடங்கிய ஒரு பிளாட்டினம். கரு அண்டப்புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது.

carboxyhaemoglobin : கார்போக்சிஹேமோகுளோபின் : கார்பன்மானாக்சைடும் ஹேமோகுளோபினும் இணைவதால் உண்டாகும் ஒரு நிலையான கூட்டுப்பொருள். இதன் மூலம் இரத்தச் சிவப்பணுக்கள் தங்கள் சுவாசப் பணியை இழக்கின்றன.

carboxylase : கார்போக்சிலேஸ் : அமினோ அமிலங்களிலிருந்து கார்போக்சில் குழுமத்தை அகற்றுவதை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.

carboxylation : கார்போக் சிலேற்றம் : ஹைடிரஜனுக்குப் பதிலாக ஒரு கார்போக்சில் மூலக் கூறினை ஏற்றுதல்.

carbrital : கார்பிரிட்டால் : கார்புரோமால், பென்டோபார் பிட்டோன் தயாரிப்புகளின் வணிகப் பெயர்.