பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carcinomatosis

252

cardiochalasia


பெரிதும் ஒத்திருக்கின்றன. இதனைப் புற்றுநோயின் தொடக்க நிலை எனலாம். இதில் சுற்றுப்புறத் திசுக்களைப் புறத்தே தள்ளிவிட்டு, அதில் புற்று தானே வளர்கிறது. இதனால் தாறுமாறான தசை வளர்ச்சி உண்டாகிறது. கருப்பை, சிறுநீர்ப் பை முன்வாயில் சுரப்பி ஆகிய வற்றில் இது முக்கியமாக ஏற்படுகிறது.

carcinomatosis : புற்றுநோய் பரவல்; புற்று மையம் : உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை.

carcinomatous : புற்றுநோய்க்குரிய.

carcinosarcoma : எலும்பு திசுப் புற்று : எலும்புத் தசைப்புற்று, சிகப்புற்று இரண்டின் தனிமங்களையும் உள்ளடக்கிய ஒர் உக்கிரமான கட்டி

cardia : உணவுக் குழாய் வாயில்; இரைப்பை வாய்; சுரப்பிலா இரைப்பை பகுதி; இதய முனை : இணைப்பையை நோக்கித் திறந்திருக்கும் உணவுக் குழாய் வாயில்.

cardiac : 1 .நெஞ்சுப்பைக்குரிய : இதயம் சார்ந்த 2. இரைப்பையின் மேற்புறத்துக்குரிய; உணவு அடைப்பு : தடங்கல் இல்லா இருந்தும் இரைப்பைக்குள் உணவு செல்ல முடியாதிருத்தல். பாதிக்கப்பட்ட உணவுக்குழாயின் சில பகுதிகளில் தசையடுக்குகளினுள் நரம்புக்கணு உயிரணுக்கள் அழிந்துபடுவதால் இது உண்டாகிறது.

மாரடைப்பு : மூளைப் பகுதிக்குப் போதிய இரத்த ஒட்டத்தைச் செலுத்தும் இதயத்தின் நடவடிக்கை நின்று போவதால் மாரடைப்பு உண்டாகிறது.

cardiac arrest : இதயம் நிற்றல்.

cardiac-cathetrization : இதய அழுத்த அளவீடு.

cardiac hypertrophy : இதய வீக்கம்.

cardiac muscle : இதயத் தசை.

cardialgia : நெஞ்சுப்பை எரிச்சல்; நெஞ்சுவலி : இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிச்சல்.

cardiectomy : நெஞ்சுப்பை முனை அறுவை : இரைப்பையின் நெஞ்சுப்பை முனையில் அறுவை செய்தல்.

cardioangiology : இதய-குருதி நாள ஆய்வியல் : இதயம் மற்று குருதி நாளங்கள் பற்றிய உயிரியல்.

cardiocal : நெஞ்சுக்குரிய.

cardiochalasia : சுருங்குதசைத் தளர்ச்சி :இரைப்பையின் நெஞ் சுப்பைச் சுருங்கு தசைகள் தளர் வடைதல்.