பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cardiodilator

253cardiomyopexy


cardiodilator : இதய விரிவாக்கி : இரைப்பை உணவுக்குழாய் இணைப்பையை பிரிவாக்குவதில் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்.

cardiogenic : நெஞ்சுப்பை நோய்; இதயம் சார்ந்த : குருதிநாளங் களில் குருதியுறைவு (குருதிக் கட்டு) ஏற்படுதல் போன்ற நெஞ்சுப்பை சார்ந்த நோய்.

cardiogram : நெஞ்சுத் துடிப்புப் பதிவு வரைவி; இதய மின்னலை வரைவி : நெஞ்சுத் துடிப்பளக்கும் கருவிபதிவு செய்த நெளிவரை.

cardiograph : நெஞ்சுத் துடிப்புப் பதிவு வரைவு மானி; இதயத் துடிப்பு வரைவி : நெஞ்சுத் துடிப்பைப் பதிவு செய்யும் கருவி.

cardioid : நெஞ்சுப்பை வடிவான; இதயவடிவம் : நெஞ்சுப்பை வடிவான வளைவு.

cardioinhibitory : இதய செயற்பாட்டுத்தடை : இதயத்தின் செயற் பாட்டைத் தடை செய்தல்.

cardiology : இதயவியல் : இதயத்தின் கட்டமைப்பு, செயற்பாடு, இதயத்தில் உண்டாகும் நோய்கள் அவற்றைக் குணப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை ஆராயும் மருத்துவ அறிவியல் துறை.

cardiolipin : நெஞ்சுப்பை கொழுப்பு : மேகநோய்க்கான குருதி வடிநீர்ச் சோதனைகள் பயன்படுத்தப்படும் இரத்தக் கிருமிபோன்ற காப்பு மூலத் தீர்வுப்பொருள்களுடன் கூடிய பாலூட்டி இதயத்தின் ஃபாஸ்போ கொழுப்புப் பொருள்.

cardiologist : இதயவியலறிஞர் : இதய நோய்களைக் குணப் படுத்துவதில் துறைபோகிய ஒரு மருத்துவ வல்லுநர்.

cardiolysis : இதயப் பகுப்பாய்வு : இதயத்தைச் சுருக்குகிற பசை களைப் பிரித்தெடுப்பதற்கான ஒர் அறுவைச் சிகிச்சை நடை முறை.

cardiomalacia : இதயத் தசை இளக்கம் : இதயத்தசையை மென்மையாக்குதல்.

cardiomegaly : இதய விரிவாக்கம்; பேரிதயம்; இதயவீக்கம் : இதயம் விரிவடைதல்.

cardiomyopathy : இதயத் தசைக் கோளாறு; இதயத் தசைநோய்; இதயத்தசைவழு : இதயத்தசையில் ஏற்படும் கடுமையான கோளாறு. இந்த நோய்க்கான காரணம் அறியப்படவில்லை. நெஞ்சுப் பையின் உள்வரி மென்தோலில் அல்லது சில சமயம் நெஞ்சுப் பையை முடிக் கொண்டிருக்கும் சவ்வில் பெரும்பாலும் இது உண்டாகிறது.

cardiomyopexy : இதயத் தசை இணைப்பு : தசையுறைக்கு இரத்தம் செல்வதை அதிகரிப்பதற்காக இதயத்தசைக்கு