பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cardiomyotomy

254

cardiorraphy


அல்லது இதய மேலுறைக்கு நெஞ்சுத்தசையைப் பொருத்துதல் போன்ற ஒரு தசைப் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துதல்.

cardiomyotomy : இதயத் தசை ஒட்டறுவை : உணவுக் குழாய் வாயிலுக்கான அறுவைச் சிகிச்சை இதய-உணவுக்குழாய் சந்திப்பு வெட்டுப்பட்டிருந்தால், அவற்றை இணைப்பதற்கு இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

cardiophone : இதய ஒலி வரைவி; இதய ஒலிக்கருவி; இதய ஒலி பேசி : இதய ஒலிகளைக் கேட்பதற்கு உதவும் ஒலிக்கருவி. இதயத்துடிப்பினை அளவிட்டுப் பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனத்தின் மூலம் நாடித் துடிப்பினை வரைபடமாக வரைய இது உதவுகிறது. கருப்பைச் சிசுவின் நாடித் துடிப்பை அறியவும் இதனைப் பயன்படுத்தலாம்.

cardioplegia : நெஞ்சுபையடைப்பு; இதயச் சுருக்கம் நிறுத்தல் : திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சையின்போது, நெஞ்சுப்பையின் தசைப்பகுதியின் அசைவைக் குறைப்பதற்காக மின் எந்திரவியல் மூலம், மருந்து அல்லது வெப்பத்தணிப்பு (hypothermia) மூலம் செயலிழக்கச் செய்தல்.

cardiopulmonary : இதயம்-நுரையீரல் சார்ந்த ; இதயம், நுரையீ ரல்கள் இரண்டும் தொடர்பான திறந்தநிலை இதய அறுவைச் சிகிச்சையின்போது இதயநுரையீரல் பக்கவழி பயன் படுத்தப்படுகிறது. இரத்த ஒட்டத்திலிருந்து இதயமும், நுரையீரல்களும் நீக்கப்பட்டு, அவற் றுக்குப் பதிலாக ஒர் இறைப்பு ஆக்சிஜனேற்றி பயன்படுத்தப் படுகிறது. . . .

cardiopyloric : நெஞ்சுப்பை-சிரைப்பை தொடர்புடைய : நெஞ்சுப்பை மற்றும் இரைப்பை தொடர்புடைய.

cardiorator : இதயத்துடிப்பு பதிவுக்கருவி : இதயத்துடிப்பினைக் கண்ணால் பார்க்கும் படி பதிவுசெய்யும் கருவி.

cardiorenal : இதயம்-சிறுநீரகம் சார்ந்த; இதய நீரக : இதயம், சிறுநீரகங்கள் இரண்டும் தொடர்பான.

cardiorespiratory : இதயம் சுவாச மண்டலம் சார்ந்த; இதய மூச்சு : இதயம், சுவாச மண்டலம் இரண்டும் தொடர் புடைய.

cardiorraphy : இதயச்சுவர் தையல் : வழக்கமாக காயங்களுக்கு அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்துவதுபோல், இதயச் சுவருக்குத் தையலிடுதல்.