பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cardioscope

255

cardiovalvulitis


cardioscope : உள் இதயச் சோதனைக் கருவி : இதயத்தின் உட்பகுதியைப் பரிசோதனை செய்வதற்காக, ஆடிகளும், ஒளிச்சுடரும் பொருத்தப்பட்ட ஒரு கருவி.

cardiospasm : நெஞ்சுப்பைச் சுருக்கம் : உணவுக்குழாயின் முனைகோடியின் இயக்கக் கோளாறு, இரைப்பையின் உணவுக்குழாய் திறப்புக் குழாய் தளர்ச்சியடையத் தவறுதல்.

cardiothoracic : இதயம்-மார்புக் குழி சார்ந்த; இதய மார்பு : இதயம், மார்புக்குழி இரண்டும் தொடர்புடைய சிகிச்சையின் ஒரு தனிப்பிரிவு.

cardiothoracic ratio : இதய மார்புக்கூட்டு விகிதம் : விலா எலும்புகளுக்குள்ள மார்புக் கூட்டின் அகலத்தில் இதயத்தின் அகலத்தின் விழுக்காடு. இதயத்தின் குறுக்கு வெட்டு விட்டம், எலும்பு மார்புக் கூட்டின் அகலத்தில் 50% குறைவாக இருக்க வேண்டும். இதய விரிவாக்கத்தில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும்.

cardiotocography : சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு : கருப்பையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு வீதத்தை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை. இதனை ஒரு புற ஒலிக்கருவி மூலமாக அல்லது கருப்பையி லிருக்கும் குழந்தையின் கபாலச் சருமத்தில் ஒரு மின்முனையைப் பொருத்தி, இந்த இதயத் துடிப்பு வீதம் பதிவு செய்யப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்குழியினுள் ஒர் அக இறங்கு குழலைச்செலுத்தி அல்லது தாயின் அடிவயிற்றில் ஒரு புற நுண்ணிடை இயக்க மானியை வைத்து தாயின் அடிவயிற்றுச் சுருக்கத்தையும் அளவிடலாம்.

cardiotomy syndrome : இதய அறுவைச் சிகிச்சை நோய்க் குறிகள் : இதய அறுவைச் சிகிச்சையினைத் தொடர்ந்து, காய்ச்சல் குலையுறை அழற்சி, நுலையீரல் உறைச்சொரிவு ஆகியவை ஏற்படுதல்.

cardiac arrest : இதயம் நிற்றல் : அறுவைச் சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பிறகு இது ஏற்படலாம். இது ஒரு தன்னியக்க ஏமத்தடைவினை என்று கருதப்படுகிறது.

cardiotoxic : இதய நச்சுப்பொருள்; இதய நச்சு : இதயத்திற்குத் தீங்கு விளைக்கும் மருந்து எதனையும் இது குறிக்கும்.

cardiovalvulitis : இதயத் தடுக்கிதழ் அழற்சி : இதயத் தடுக்கிதழ்களின் வீக்கம்.