பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cardiovalvulotome

256

cariogenic


cardiovalvulotome : இதயத்தடுக்கிதழ் அறுவைக் கருவி : இதயத் தடுக்கிதழின் ஒரு பகுதியை வெட்டியெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவி.

cardiovascular : இதயம் குருதி நாளம் சார்ந்த; இதயக் குழலிய ;இதயம், குருதி நாளங்கள் இரண்டும் தொடர்புடைய.

cardioversion : இதயத்துடிப்பு மீட்பு; இதயத் திருப்பம் : இதயத் துடிப்பினை இயல்பான நிலைக்கு மீட்பதற்காக மின்னியல் சாதன அதிர்ச்சியைப் பயன்படுத்துதல்.

carditis : இதய வீக்கம்; இதய அழற்சி : நெஞ்சுப்பை அழற்சி.

cardophyllin : கார்டோஃபைலின் : அமினோஃபைலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Cardtest : அட்டைச் சோதனை : எலும்புகளிடையிலான தசை களின் முழுமைத் திறனைச் சோதனை செய்வதற்காக, நோயாளிகள் விரல்களை முற்றிலும் நேராக நீட்டி வைத்துக் கொண்டு கையை காட்டும்படி கூறப்படுகிறார். விரல்களுக்கிடையிலான பிளவில் ஒரு விறைப்பான காகிதக்கற்றை செருகப்படுகிறது. விரல்களுக்கு இடையே அதனைப் பற்றிக் கொள்ளும்படி அவர் கேட்டுப்படுகிறார். இயல்பாக அவ்வாறு பற்றிக்கொள்கிற விரல்கள் எதிர்ப்பைக்காட்டும். எலும்புகளுக்கு இடையிலான தசைகள் பலவீனமாக இருந்தால் விரல்களின் பிடிப்பு பலுவீனமாக இருக்கும். காகிதம் பிளவு வழியாக நழுவி விழுந்து விடும்.

care : கவனிப்பு : கவலைக்கிடமாக உள்ள நோயாளிகளைத் தீவிரமாகக் கவனித்தல், முதலில் நோய் பீடித்த ஒருவரின் அடிப்படை மருத்துவக் கவனிப்பு: ஒரு மருத்துவ வல்லுநர் ஒரு மருத்துவரை இரண்டாம் நிலையில் கவனித்தல்; விரிவான மருத்துவக் கவனிப்புக்காக அலுவலர்களும், கருவிகளுடைய ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு நோயாளியைக் கவனித்தல்.

caries : பல் சொத்தை; எலும்புத் திசு மரிப்பு; சொத்தை : பல் சொத்தையாதல், எலும்பு உள்ளழிவு.

carina : குரல்வளை அடிக்கட்டை; கவை : குரல்வளை இரு மூச்சுக் குழாய்களாகப் பிரியும் இடத்தில் உள்ள அடிக்கட்டை (கீல்) வடிவ குருத்தெலும்பு மூலம் முனைப்பாகக் காட்டப்படும் அடிக்கட்டை அமைப்பு.

cariogenic : பல் சொத்தை ஊக்கிக் கிருமி : பல் சொத்தையினை உண்டாக்கும் கிருமி எதுவும்.