பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Carious

257

carotenoids


carious : பல்சொத்தை சார்ந்த : 1. பல்சொத்தை தொடர்புடைய, (2) குழிகள் உள்ள பற்கள்.

carlen's tube : கார்லன் குழாய் : நுரையீரல்களின் மூச்சுப்பை யின் கொள்திறனை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரட்டை ஒளிர்வு இதய உள்ளுறைச் செருகு குழல். ஸ்காண்டிநேவிய குரல்வளை நோய் வல்லுநர் இ. கார்லன் என்பாரின் பெயரால் அழைக் கப்படுகிறது.

carmitine : கேமிட்டின் : வளர் சிதை மாற்றம் செய்யக்கூடிய பால்மிட்டிக் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற வேதியியல் பொருள்.

carminative : வயிற்று உப்புச மருந்து; இரைப்பைக் குடல் வலி நீக்கி; பசியூட்டி : வயிற்று உப்புசத்தை நீக்குகிற மருந்து இல வங்கப்பட்டை, கிராம்பு,இஞ்சி, ஜாதிக்காய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.

carmustine : கார்மஸ்டின் : உடற்கட்டி எதிர்ப்பு நைட்லோ சூரியா எனப்படும் ஒரு கூட்டுப்பொருள். (BCNU).

carnal : பாலுணர்வு சார்ந்த : புலனுணர்வுக்குரிய, சதை வேட்கைகள் தொடர்பான.

carneous mole : தசைப்பிண்டம் : கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக் கட்டி, கருச்சிதைவினால் வெளி ஏறாமல் இருக்கும் இறந்து போன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றினாலானது.

carnification : திசு மாற்றம் : எலும்பு-ஈரல் முதலிய உறுப்புக்கள் தசை அல்லது தசைநார் போன்ற பொருளாக மாற்ற மடைதல்,

carnity : திசு மாறுபாடு : எலும்பு -ஈரல் முதலியவற்றைத் தசை அல்லது தசைநார் போன்று மாற்று, தசை அல்லது தசை நார் போன்று மாறுபடு.

carnosity : மிகைதசை வளர்ச்சி : உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.

carotenaemia : கரோட்டினேமியா : இரத்தத்தில் கரோட்டின் இருத்தல். இதனால், தோல் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

carotenes : கரோட்டீன்; மஞ்சளம் : இயற்கையாகக் கிடைக் கும் நிறமிகளின் தொகுதி. இது ஆல்ஃபா, பீட்டா, காமா என்ற மூன்று வடிவங்களில் உள்ளது. இதில் பீட்டாவடிவம், உடலில் வைட்டமின்-A ஊட்டச்சத்தாக மாற்றப்படுகிறது.

carotenoids : கரோட்டின் நிறமிக் குடும்பம் : இயற்கையில் கிடைக்கும், செம்மஞ்சள் வண்ணமுள்ள